News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 4வது தங்கம் உள்ளிட்ட வெள்ளி, வெண்கலம் என பதக்கங்களை வாரிக் குவித்து வருகிறது.

சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் 9வது ஆசிய விளையாட்டு போட்டி கடந்த 23ம் தேதி (செப்.) கோலாகலமாக ஆரம்பமானது. இப்போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

(நேற்றைய பதக்கப்பட்டியல் பட்டியல் நிலவரம்)

கிரிக்கெட்&1 தங்கம்

குதிரையேற்றம்& 1 தங்கம்

துடுப்பு படகு போட்டி&2 வெள்ளி, 3 வெண்கலம்

பாய்மரப் படகு போட்டி&1 வெள்ளி, 1 வெண்கலம்

துப்பாக்கி சுடுதல்& 1 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம்

ஆக மொத்தம் 3 தங்கம், 4 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 14 பதக்களை பெற்று பதக்கப்பட்டியலில் நேற்று நிலவரப்படி இந்தியா 7வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்களுக்குகான 25 மீட்டர் பிஸ்டர் பிரிவில் மனு பாக்கர், இஷா சிங் மற்றும் ரிதம் சங்வான் ஆகிய வீராங்கணைகள் கொண்ட இந்திய அணி 1.759 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

அதன்படி இந்தியா இதுவரை (செப்.27) 4 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் எனு மொத்தம் 16 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் அதே 7வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link