Share via:
இன்று
தலைமைச் செயலகத்தில், 100 ஆண்டுகள் கடந்து வாழ்ந்துவரும் முன்னாள் அமைச்சர்களான வி. வி. சுவாமிநாதன் மற்றும் டாக்டர் எச். வி. ஹண்டே ஆகியோரை முதல்வர் விஜய் கௌரவித்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை
ஏற்படுத்தியிருக்கிறது.
இன்று தலைமைச் செயலகத்தில் டி.என்.எல்.ஏ. அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட
முதலமைச்சர் ஜோசப் விஜய், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான வி.வி. சுவாமிநாதன் மற்றும் டாக்டர் எச்.வி. ஹாண்டே ஆகியோரின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு அவர்களைக் கௌரவித்தார். முதலமைச்சர் அவர்கள், இருவருக்கும் பொன்னாடை போர்த்தியும், மாலை அணிவித்தும், நினைவுப் பரிசுகளை வழங்கியும் அவர்களைச் சிறப்பித்தார். அதோடு, இருவரது காலில் விழுந்து
ஆசிர்வாதம் வாங்கினார்.
இவர்களில் டாக்டர் ஹண்டே இப்போது பாஜகவில் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்க
ஒன்று. அந்த விழாவில் பேசிய ஹண்டே, ‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் அதாவது இடித்து பேசக் கூடியவர்கள் இல்லாத மன்னன் பாதுகாப்பற்ற மன்னன். எனவே, எதிர்க்கட்சியினர் விமர்சனங்களுக்கும்
முதல்வர் காது கொடுக்கவேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தார்.

