Share via:
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது பிறந்தநாளை ஒட்டி, பெற்றோர்கள் மு.க.ஸ்டாடலின், துர்காவிடம் ஆசி பெற்றார். இதுகுறித்து அவர், ‘’பிறந்த நாளை முன்னிட்டு எந்நாளும் அன்போடு வழிநடத்தும் கழகத்தலைவர் – பாசமிகு அப்பாவிடமும் – அரவணைத்து ஊக்குவிக்கும் அம்மாவிடமும் இன்று காலை வாழ்த்துப் பெற்றேன். அம்மா – அப்பாவுக்கு அன்பும் முத்தங்களும்’’ என்று பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து, சென்னை மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். உதயநிதி பிறந்த நாள் கொண்டாட்டம் அட்டகாசமாக
பல இடங்களில் நடைபெறும் நிலையில், இரண்டு பேர் மரணம் தமிழகத்தை அதிர வைத்துள்ளது.
இதுகுறித்து தமிழக அமைச்சர் நிர்மல்குமார், ‘’திருவள்ளூர் மாவட்டம், வாணியஞ்சத்திரம் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பேனர் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வேலன், வீரேந்தர், ஆல்பர்ட் ஆகிய மூவர் மின்சாரக் கம்பி உரசியதில் வேலன், வீரேந்தர் ஆகிய இருவர் உயிரிழந்தனர். ஆல்பர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒருசிலரது இருப்பை காட்டுவதற்காக விலைமதிக்க முடியாத இரண்டு உயிரைகளை இழந்துள்ளோம். உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்…’’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இறந்தவர்கள் குறித்து இதுவரை திமுகவில் இருந்து அஞ்சலி செய்தியோ,
ஆறுதல், நிதியுதவி போன்ற தகவல்கள் எதுவும் வரவில்லை. இதுகுறித்து தவெகவினர், ‘’வாணியஞ்சத்திரத்தில் உதயநிதி பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காகப் பேனர் அமைக்கும்போது இரண்டு இளைஞர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். இன்னொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த இரண்டு குடும்பங்களின் கதறல் உங்கள் காதுகளுக்குக் கேட்கவில்லையா? இரண்டு குடும்பங்களின் வீட்டில் மரண ஓலம். உங்கள் பிறந்தநாள் பேனருக்காக இரண்டு உயிர்கள் பலியாகியுள்ளன. ஒரு குடும்பத்தின் எதிர்காலமே இருண்டுவிட்டது. கொண்டாட்டத்தை விட மனித உயிர் பெரிது. இந்த மரணங்களுக்கு யார் பொறுப்பேற்பார்கள்?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறது.
இப்போது பாதிக்கப்பட்ட அந்த இரண்டு குடும்பத்தினர் உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து தகுந்த இழப்பீடு வேண்டும் என முறையிட்டு குடும்பத்துடன் போராட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

