News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

இனிமேல் அரசியல் கிடையாது என்று பா.ம.க.வை மீட்க முடியாமல் அன்புமணியிடம் தோல்வியடைந்த டாக்டர் ராமதாஸ், மீண்டும் ஒரு புதிய இயக்கத்தை அறிவித்துள்ளார்.

தமிழ் மொழி மற்றும் தமிழர் பண்பாட்டைப் பாதுகாக்கும் நோக்கில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் “தமிழ் மீட்பு இயக்கம்” என்ற பெயரில் புதிய அமைப்பை தொடங்கியுள்ளார்.

புதிய இயக்கம் தொடங்கியதற்கான காரணம் குறித்து மருத்துவர் ராமதாஸ்,  “தமிழ்நாட்டில் ‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்ற முழக்கம் இன்றளவும் நடைமுறைக்கு வரவில்லை. தமிழில் உரையாடும்போதுகூட ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளின் கலப்பு அதிகரித்து வருகிறது.

கல்வி, இறை வழிபாடு, பண்பாட்டு நிகழ்வுகள், நீதிமன்ற நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழுக்கு உரிய இடம் கிடைக்கவில்லை.  மேலும், கடைவீதிகளின் பெயர்ப் பலகைகளில் தமிழுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அரசாணைகளும் நீதிமன்ற உத்தரவுகளும் இருந்தபோதிலும், அவை முறையாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை.

கடந்த 50 ஆண்டுகளாகத் தமிழ் மொழியின் உரிமைகளுக்காகப் பல்வேறு தரப்பினரும் போராடி வந்தாலும், எதிர்பார்த்த அளவிலான மாற்றங்கள் ஏற்படவில்ல. எனவே, தாய்த்தமிழ் மொழியை மீட்டெடுத்து, தமிழர்களின் அன்றாட வாழ்வில் பயன்பாட்டு மொழியாக மாற்றுவதே புதிய இயக்கத்தின் முக்கிய நோக்கம்’’ என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அடுத்து அவரது மகள் காந்தி என்ன அறிவிக்கப்போகிறாரோ…? 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link