News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு வாழ்த்துச் செய்தி கொடுத்திருப்பதுடன், மீனவர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு பல திட்டங்களும் வகுத்திருக்கிறார் முதல்வர் விஜய்.

இன்று அவரது வாழ்த்து செய்தியில், ‘’கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பையும், இயற்கையின் சவால்களையும் எதிர்கொண்டு, தங்கள் உயிரையும், உடைமையையும் பணயம் வைத்து உழைக்கும் மீனவப் பெருமக்களுக்கு உலக மீனவர் தினத்தில் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 தங்களின் கடின உழைப்பால் நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றி வரும் மீனவப் பெருமக்களின் அர்ப்பணிப்பு மகத்தானது. மீனவச் சமுதாயத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அவர்களின் பாதுகாப்பான மற்றும் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்வது நம் அனைவரின் கடமையாகும். மீனவப் பெருமக்களின் நலன்களை பேணிப் பாதுகாப்போம்’’ என்று உறுதி எடுத்திருக்கிறார்.

அதோடு மட்டுமின்றி, மீனவர்களின் இன்னுயிர் காக்க, தமிழ்நாட்டில் முதன்முறையாக கடல் ஆம்புலன்ஸ் திட்டத்தை செயல்படுத்தவும் தற்போது ரூ.5 லட்சமாக உள்ள மீனவர்களுக்கான காப்பீட்டுத் தொகையை இரண்டு மூன்று மடங்காக உயர்த்துவது குறித்தும் தீவிரமாக விஜய் தலைமையிலான தவெக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

கடல் ஆம்புலன்ஸ் நடைமுறைக்கு வந்துவிட்டால், கடலில் மீனவர்கள் அச்சம் இன்றி நுழையலாம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link