News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

தன்னுடைய கட்சித் தொண்டருக்கு எப்படி பிரியாவிடை கொடுக்கவேண்டும் என்று பாரம்பரிய கட்சிகளுக்குப் பாடம் நடத்தியிருக்கிறார் முதலர் விஜய். மருத்துவமனையில் சிகிச்ச்சையில் இருந்து மரணம் தழுவிய வி.எஸ்.பாபுவின் உடலை சுமந்துசென்ற காட்சியைப் பார்த்து தமிழகமே ஆனந்தக் கண்ணீர் விட்டது.

முதல்வர் என்ற பதவிக்குத் தனி மதிப்பும் மரியாதையும் உண்டு. அவரைச் சுற்றி மிகப்பெரும் பாதுகாப்பு வளையம் உண்டு. இவை எல்லாவற்றையும் தூக்கி தூரமாக எறிந்துவிட்டு ஒரு உண்மைத் தலைவனாக தனது கட்சியின் தொண்டராக இருந்த  எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடலை தனது தோளில் சுமந்து சென்றார் முதலமைச்சர் ஜோசப் விஜய்.

முதல் நாள் வி.எஸ்.பாபு உடலுக்கு மாலையிட வந்தபோது ஏராளமான ரசிகர்கள் செல்ஃபி எடுத்தார்கள். அந்த விவகாரம் சர்ச்சையானது. ஒரு மரண வீட்டில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது விஜய்க்குத் தெரியவில்லை என்று விமர்சனம் செய்தார்கள். அதற்கெல்லாம் பதிலடி போன்று நேற்று பாபுவின் பிள்ளைகளில் ஒருவராக நின்று இறுதிக் காரியம் செய்திருக்கிறார் விஜய்.

கடந்த ஏப்ரல் 2026 சட்டமன்ற தேர்தலில், திமுக தலைவரும், அப்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை கொளத்தூர் தொகுதியில் தோற்கடித்து தமிழ்நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தவர் தான் வி.எஸ்.பாபு. அவர் 82,997 வாக்குகள் பெற்று 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சரித்திரம் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

75 வயதான அவர் கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 71 நாட்கள் போராடியும் அவரது உடல்நிலை மோசமாகி கடந்த வியாழக்கிழமை மதியம் 2.24 மணிக்கு மாரடைப்பால் அவர் உயிரிழந்தார். அவரது மறைவு செய்தி கேட்டதும் முதலமைச்சர் விஜய் பெரும் சோகத்தில் ஆழ்ந்தார். மக்களோடு மக்களாக வாழ்ந்து, மக்களின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்ற வி.எஸ்.பாபுவின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று அவர் இரங்கல் தெரிவித்திருந்தார். அவரது உடல் பெரம்பூர் கொளத்தூர் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள், கட்சி தொண்டர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. பல்லவன் சாலை மயானத்தில் அவரது இறுதி ஊர்வலம் நடைபெற்ற போது, அந்த பந்தலுக்குள் நீலம், வெள்ளை நிற துணிகளுக்கு நடுவே, நூற்றுக்கணக்கான தொண்டர்கள் சூழ்ந்திருக்க, சிவப்பு, மஞ்சள் பட்டு போர்த்தப்பட்ட பாடையை முதலமைச்சர் விஜய் தனது தோளில் சுமந்தபடி முன்னே நடந்து சென்றார்

வெள்ளை சட்டையில், கண்ணில் சோகத்தோடு, தோளில் பாடையை தாங்கியபடி அவர் நடந்து வந்த போது, சுற்றி இருந்த தொண்டர்கள் யாரும் கோஷம் போடவில்லை, யாரும் கைதட்டவில்லை, அனைவரும் அமைதியாக கண்ணீரோடு அந்த காட்சியை பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு முதலமைச்சர் தனது எம்எல்ஏவின் உடலை தோளில் சுமப்பது என்பது வெறும் சடங்கு இல்லை, அது ஒரு தலைவன் தனது தொண்டனுக்கு கொடுக்கும் மிகப்பெரிய மரியாதை,

ஒரு முதல்வரின் பெருமை அவர் அமரும் பதவியில் இல்லை… அவர் வெளிப்படுத்தும் மனிதநேயத்தில் இருக்கிறது! கொளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு அவர்களின் உடலைத் தோளில் சுமந்து சென்ற முதல்வர் விஜய்யின் செயல், அரசியலைத் தாண்டிய மனிதநேயத்தின் அடையாளம்.

அதிகாரம் வந்ததும் அகந்தை வர வேண்டும் என்ற அவசியமில்லை என்பதைச் செயலில் காட்டியிருக்கிறார். பதவி ஒருவரை உயர்த்தலாம்… ஆனால் மனிதநேயம் மட்டுமே ஒருவரைப் பெருமைப்படுத்தும்! இது வெறும் அரசியல் நிகழ்வு அல்ல… தலைமைப் பண்பின் அடையாளம் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் விஜய்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link