News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

அடுத்த பிரதமர், மூன்றாவது அணி என்றெல்லாம் டெல்லியில் ஃபிலிம் காட்டிக்கொண்டிருக்கும் திமுகவின் விஞ்ஞான ஊழலை இன்று தவெக டெல்லியில் வைத்தே அம்பலப்படுத்தியிருக்கிறது.

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் அகல்விளக்கு, ஃபீனிக்ஸ் பதிப்பகத்திடம் இருந்து மட்டும் 1.74 கோடி மதிப்புள்ள புத்தகங்களை வாங்கியுள்ளது என்று டெல்லியில் திமுகவின் ஏஐ புத்தக ஊழலை அம்பலப்படுத்தியிருக்கிறார் அமைச்சர் ராஜ்மோகன்.

கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்துக்கு புத்தகங்கள் வாங்கியதில் முறைகேடு புகார்களைத் தொடர்ந்து, பொது நூலகத்துறை பொறுப்பு இயக்குநர் எஸ்.ஜெயந்தி மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக ஷஜீவனா நியமிக்கப்பட்டார். மேலும், புத்தகக் கொள்முதல் முறைகேடு தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை சார்பில் லஞ்ச ஒழிப்புப் போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டதும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் போலீஸார் சோதனை நடத்தினர்.

தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள நூலகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, போலி நூல்களை அகற்றும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இதற்கிடையே, முறைகேடு புகார் தொடர்பாக நூலகத் துறையைச் சேர்ந்த 5 அதிகாரிகள் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், லஞ்ச ஒழிப்புப் போலீஸாரின் விசாரணையில், அகல் விளக்கு பதிப்பக உரிமையாளர் ஆர்.மோகன், பீனிக்ஸ் பப்ளிகேஷன்ஸ் மற்றும் சென்னை பொது நூலக இயக்குநரகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், கோவை பெரியார் அறிவுலகம் நூலகம் ஆகியவற்றைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நபர்கள் உள்ளிட்டோர் கூட்டுச் சதியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக மோகன், பீனிக்ஸ் பப்ளிகேஷன்ஸ் மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள மோகனின் அலுவலகம், மடிப்பாக்கத்தில் உள்ள பீனிக்ஸ் பப்ளிகேஷன்ஸ் அலுவலகம், அதன் உரிமையாளர்களின் வீடுகள் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், தென்காசி ஆகிய 4 மாவட்ட மைய நூலகங்களில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. கோவை பெரியார் அறிவுலகத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், இந்த நிறுவனங்களின் புத்தகங்கள் அச்சிடப்படும் திருவாரூர் மாவட்டம் குடவாசலில் உள்ள அச்சகத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, புத்தகக் கொள்முதலுக்கான ரசீதுகள், ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் வழக்குத் தொடர்பான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, அகல் விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகனை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் டெல்லியில் இதுகுறித்து பேசிய ராஜ்மோகன், ‘’உலகத்திலேயே இதுபோன்று இதுவரை நடந்தது இல்லை. புத்தக கொள்முதல்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்படும் போலி புத்தக கொள்முதல் முறைகேட்டில் ஈடுபட்ட அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை பாயும்.

தவெக ஆட்சியில் போலியான புத்தகங்கள் கொள்முதல் செய்யப்படவில்லை. நூலகங்களில் ஆங்கில நூல்களை இன்னும் ஆய்வு செய்யவில்லை. உலகிலேயே முதல் முறையாக புத்தக கொள்முதலில் ஊழல். அரசியல் தலையீடு இல்லாமல் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பில்லை.

இந்த விவகாரத்தில் எவரையும் நாங்கள் சும்மா விடப்போவதில்லை. பல்வேறு நாடுகளில் பல்வேறு இடங்களில் நூலகங்களில் கட்டுமானத்தில் தான் ஊழல் நடைபெற்றது. ஆனால் உலகத்தில் முதல் முறையாக புத்தகத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது. பெரியாரின் பெயரில் நூலகம் திறந்து ஊழல் செய்திருக்கிறார்கள்.
முதலமைச்சர் விஜயின் ஆட்சியில் இது போன்ற எந்த ஒரு புத்தகமும் நாங்கள் வாங்கவில்லை, ஒரு குப்பையான புத்தகங்களை நாங்கள் வழங்கவில்லை.

இந்த விவகாரம் தொடர்பாக ஒரு விரிவான சுதந்திரமான விசாரணை நடைபெறும். விரைவில் தரமற்ற புத்தகங்களும் நீக்கப்பட்டு நல்ல புத்தகங்கள் மீண்டும் நூலகத்தில் வைக்கப்படும். ஒரு நூலகத்தில் உள்ள பல்வேறு சிறு சிறு நூலகங்களில் கூட இந்த குறிப்பிட்ட பதிப்பகம் தன்னுடைய புத்தகத்தை வைத்திருக்கிறார்கள்

எனவே இந்த விவகாரத்தில் ஒரு அரசியல் பின்புலம் இல்லாமலோ அல்லது அரசியல்வாதிகளின் துணை இல்லாமல் நடக்க வாய்ப்பில்லை .இந்த விவகாரத்தில் எந்தெந்த அரசியல்வாதிகள் பின்புலத்தில் உள்ளார்கள் என்பது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

கன்னிமாரா நூலகத்தில் 550 ஏ.ஐ புத்தகங்கள் கண்டுபிடித்துள்ளோம், அதில் அந்த புத்தகத்தை வைத்தது யார்? ஒன்றைரை ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்ற இந்த விவகாரத்தில் ஊழல் செய்தது யார்?
இவ்வாறு ஊழல் நடைபெற்ற விவகாரம் தொடர்பாக ஏன் திமுக முறையாக பதில் அளிக்கவில்லை? இது தொடர்பாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஏன் பதிலளிக்கவில்லை? முதல்வர் விஜயின் ஆட்சி காலத்தில் ஒரு புத்தகங்கள் கூட இதுவரை கொள்முதல் செய்யப்படவில்லை. நாங்கள் கொள்முதல் செய்தால் இப்படியான குப்பை புத்தகங்களை கொள்முதல் செய்யவே மாட்டோம்.

இனிமேல் தமிழ்நாட்டில் புத்தகங்களை கொள்முதல் செய்வதுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவோம். தற்பொழுது உள்ள விஷ கிருமிகளை அகற்றி விட்டு புதிய முறையில் புத்தகங்களை கொள்முதல் செய்வோம். முதலமைச்சர் விஜய் பெயரில் வந்த புத்தகங்கள் உள்ளிட்டவையும் திமுக ஆட்சி காலத்தில் தான் வாங்கப்பட்டவை. புத்தகங்களை பரிந்துரைத்த குழு மற்றும் ஒப்புதல் அளித்த குழு ஆகியோர்கள் மீதும் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற குப்பையான புத்தகங்களை சேகரித்து வைத்திருக்கின்றோம் அனைத்தையும் ஒரு மிகப்பெரிய அரங்கில் காட்சிப்படுத்துவோம்

ஏனெனில் இது போன்ற ஒரு ஊழல் எந்த ஒரு மாநிலத்திலும் இதற்கு மேல் நடைபெற கூடாது என்பதற்காக நாங்கள் அந்த குப்பையான புத்தகங்களை காட்சிப்படுத்துவோம். புத்தக ஊழலில் ஈடுபட்ட யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எந்த ஒரு அரசியல்வாதியாக இருந்தாலும், அவர் யாருடைய வலக்கரம் இடக்கரம் என இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்..’’ என்று உறுதி அளித்துள்ளார்,

திமுக மானம் கப்பலேறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link