News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

ஆளும் பாஜகவை பதறவைக்கும் அளவுக்கு டெல்லியில் சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழா நடந்துமுடிந்திருக்கிறது. இண்டியா கூட்டணி போன்று அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து அன்புடன் சோனியாவுக்கு மரியாதை செய்திருக்கிறார்கள்.

ராகுல்காந்தியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில் அவர் பேசுகையில், ‘’என் தாயார் சோனியா காந்தியை அறிய விரும்பினால், ஒருமுறை என் பார்வையில் இருந்து அவர்களை பாருங்கள். அவர்களின் தைரியம், அவர்களின் உணர்வுபூர்வமான தன்மை மற்றும் எல்லா சிரமங்களுக்கிடையிலும் வாழ்க்கையை அன்புடன் கட்டமைத்தார். இதுவே என் அம்மா. இன்று அம்மாவின் புத்தகத்திற்கு இவ்வளவு அன்பு மற்றும் அனுசரிப்பை அளித்ததற்கு நீங்கள் அனைவருக்கும் என் இதயத்திலிருந்து நன்றி’’ கூறியிருக்கிறார்.

இந்த கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, தமிழக வெற்றிக் கழகம் என பாஜகவுக்கு எதிரான ஒட்டுமொத்த ஜனநாயக அமைப்புகளும் காங்கிரஸ் பக்கம் நின்றுள்ளது.

இதில் அழைக்கப்படாத கட்சி திமுக மட்டும்தான். இப்போது திமுக’வினர் “மூன்றாவது அணியை தேசிய அளவில் உருவாக்க போகின்றோம்… அதில் ஸ்டாலின் தான் பிரதமர்..!” என்று உருட்டிவருகிறார்கள்.

அதுவும் இந்த விழாவில் முன் வரிசையில் அமரவைத்து விஜய்க்குக் கொடுக்கப்பட்ட ஸ்பெஷல் கவனிப்பும் வரவேற்பும் திமுகவையும் பாஜகவையும் பதறவைத்துள்ளது. அரசியல் மாற்றம் டெல்லியில் ஆரம்பமாகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link