News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

சொன்னதை மட்டுமின்றி சொல்லாததையும் செய்தது திமுக அரசு என்று ஸ்டாலின் பெருமையாகப் பேசுவார். உண்மையில் அப்படி எதுவும் செய்யவே மாட்டார். ஆனால், விஜய் இன்று சொன்னதை அப்படியே நிறைவேற்றிக் காட்டியிருக்கிறார்.  

திமுக ஆட்சிக் காலத்தில் ஜனநாயக முறைப்படி தங்களது உரிமைகளுக்காகப் போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் ஏராளமான வழக்குகள் போடப்பட்டன. அந்த வழக்குகள் எல்லாம் வாபஸ் பெறப்படும் என்று ஸ்டாலின் சொன்னாரே தவிர, எதுவும் செய்யவே இல்லை.

இந்த நிலையில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு கடந்த செப்டம்பர் 2ல் தமிழக முதல்வர் விஜய் சட்டசபையில், விதி 110-ன் கீழ் விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடிய போது அவர்கள் மீது கடந்த ஆட்சிக் காலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்ப பெறப்படும் அறிவித்தார்.

முதல்வர் விஜயின் ஆணைக்கிணங்க, மே 2021 முதல் ஏப்ரல் 2026 வரை விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது போடப்பட்ட 600 வழக்குகள் கண்டறிப்பட்டன. அவற்றைத் திரும்ப பெற உரிய சட்ட விதிகளின்படி ஆய்வு செய்து இவ்வழக்குகளில் பதிவு செய்யப்பட்ட 92,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் அவ்வழக்குகளில் இருந்து விடுவித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

கடமைக்காக அறிவிப்பாக இல்லாமல் நிஜமாகவே விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது அனைவரையும் குதூகலப்படுத்தியிருக்கிறது. தவெக அரசுக்கு விவசாயிகள் பாராட்டு குவிகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link