News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

கள்ளக்குறிச்சி தவெக
எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ், அம்மாவட்ட பெண் ஆட்சியருக்கு சர்ச்சைக்குரிய குறுஞ்செய்திகளை
அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் மீது தேசிய மகளிர் ஆணையம் தானாக விசாரணைக்கு
எடுத்துள்ள விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஜே.இ. பத்மஜாவுக்கு,
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ் ஆபாசமான வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளை
அனுப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, 2026 நவம்பர் 11ஆம் தேதி நியூஸ்மினிட்
ஊடகத்தில் வெளியான செய்தியின் அடிப்படையில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து இந்த
விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துள்ளது.

தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவி திருமதி விஜயா ரஹத்கர், இந்தக்
குற்றச்சாட்டுகள் தொடர்பாக நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்துமாறு தமிழ்நாடு
காவல்துறை தலைமை இயக்குநருக்கு  கடிதம் எழுதியுள்ளார்.
மாவட்ட ஆட்சியர் ஏற்கெனவே உயர் அதிகாரிகளிடம் அளித்ததாகக் கூறப்படும் புகார் மனுக்கள்
மற்றும் அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்
என்று ஆணையம் வலியுறுத்தியுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பான அனைத்து டிஜிட்டல்
ஆதாரங்களையும் பாதுகாத்து, அவற்றை முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர் எந்தப் பதவியில் இருந்தாலும், அரசியல் அல்லது வெளிப்புறத்
தலையீடுகள் எதுவுமின்றி இந்த விசாரணை நடைபெற வேண்டும் என்றும் ஆணையம் திட்டவட்டமாகத்
தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் தற்போதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன,
குறிஞ்செய்தியில் என்ன அனுப்பப்பட்டுள்ளது என்றும் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால், இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து மிரட்டிவரும் திமுகவுக்கு ஆதரவாக இப்போது
பாஜகவும் களம் இறங்கியிருப்பதாக தவெகவினர் கூறுகிறார்கள்.

முதலில் கலெக்டர் தலைமை செயலாளரிடம் புகார் கொடுத்தார் என்றார்கள்.
அடுத்து மத்திய அரசிடம் புகார் என்றார்கள். இவை எல்லாமே பொய் என்பது தெரியவந்ததும்
இப்போது மகளிர் ஆணையத்தை வைத்து மிரட்டுகிறார்கள்.

இந்த
விவகாரம்
மூலம் தவெக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தவும், அழுத்தத்துக்கு உள்ளாக்கவும் முயற்சி
செய்வது உறுதியாகியுள்ளது. உண்மையில் எதுவும் நடக்கவில்லை என்பதாலே விஜய் இன்னமும்
அமைதி காக்கிறார்.

யார் என்ன சொன்னாலும் விஜய்யை அசைக்க முடியாது என்பது ஆணைய விசாரணையில்
தெ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link