News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் சாலைப் பணிகளுக்கான டெண்டர்கள் ஒதுக்கியதில் ரூ.98.25 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்த முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியுடன், அப்போதைய பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர் கே.எஸ். கந்தசாமி மற்றும் கோவை மாநகராட்சி முன்னாள் ஆணையர் கே. விஜய கார்த்திகேயன் ஆகிய இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை குற்றப்பத்திரிகை தயார் செய்தது. அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் திமுக இந்த வழக்கை குப்பையில் போட்டது.

ஊழலை எந்த வகையிலும் சகித்துக்கொள்ள மாட்டேன் என்று விஜய் உறுதி அளித்திருண்டார். ஆகவே, இந்த வழக்கில் விஜய் ஆட்சிக்கு வந்தபிறகு மேல் நடவடிக்கை தொடங்கப்பட்டது. அதன்படி, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகேயன் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி வழங்குவதற்கான நடைமுறைகளை இரண்டு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என மத்திய அரசிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது

இந்நிலையில், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சி துறை கிளை செயலாளர் சார்பில் தாக்கல் செய்துள்ள மனுவில் குற்றம்சாட்டப்பட்ட இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி வழங்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் மீது உடனடியாக குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு. சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விவரங்களை அடுத்த விசாரணை நாளான டிசம்பர் 4 அன்று தெரிவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு போட்டுள்ளது. எனவே, இனியும் வேலுமணி இந்த விஷயத்தில் தப்புவதற்கு வாய்ப்பு இல்லை என்றே சொல்லப்படுகிறது.

எனவே, அடுத்து சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் தருணத்தில் வேலுமணி ஆதரிப்பாரா அல்லது எதிர்ப்பாரா என்பதுதான் பெரும் கேள்வியாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link