News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

கொளத்தூர் தொகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு முதல்வர் விஜய் இன்று கேக் கொடுக்கிறார் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்தே ஏரியா விழா கோலம் பூண்டிருந்தது. அதன்படி, குழந்தைகளுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கி தனது குழந்தைகள் தின வாழ்த்தை தெரிவித்தார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கேக்குகள், குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு இனிப்புப் பொங்கல் வழங்குதல் ஆகியவை கொண்டாடப்படுவதாக அறிவிப்பு வெளியானது.

நவம்பர் 14 விடுமுறை தினம் என்பதால் இன்று அதாவது நவம்பர் 13 அன்று, முதலமைச்சர் விஜய் கொளத்தூரில் உள்ள மதுமா நகர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்குச் சென்று, ஒரு பிரம்மாண்டமான குழந்தைகள் தின நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 61 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு 45 கிராம் எடையுள்ள கேக்குகளும் வாழ்த்து அட்டைகளும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு ரூ.9.27 கோடி செலவானது.

இது, மாநிலத்தில் இத்தகைய முதல் பெரிய அளவிலான கேக் வழங்கும் நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.  இதன் மூலம் சென்னையில் மட்டும் மூன்று லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். வகுப்பறைகளிலும், சீருடை அணிந்த குழந்தைகளுடனும் முதலமைச்சர் இருக்கும் புகைப்படங்களை ரசிகர்கள் பகிர்ந்து, கொண்டாட்டங்களில் அவரது தனிப்பட்ட அக்கறையை எடுத்துக்காட்டினர்.

வேலு நாச்சியார், ஜவஹர்லால் நேரு போன்று பல்வேறு வேடங்களில் வருகை தந்த குழந்தைகள் விஜய்யிடம் நடித்துக்காட்டி கைதட்டல் வாங்கினார்கள். விஜய்யிடம் கேக் வாங்கிய குழந்தைகள் மட்டுமின்றி பள்ளி வளாகத்தில் அத்தனை பிள்ளைகளும் ஆசிரியர்களும் செம ஹேப்பி.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link