News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

கோவை பெரியார் அறிவுலகம் புத்தக கொள்முதல் சர்ச்சையில் திமுகவின் பெயர் நாறத் தொடங்கிவிட்டது. புத்தகங்கள் வாங்குவதற்கு ஒதுக்கப்பட்ட 50 கோடி ரூபாயில் மெகா ஊழல் நடந்திருக்கிறது.

அகல்விளக்கின் உரிமையாளரை ஒருவழியாக கண்டுபிடித்து பேட்டி எடுத்துள்ளனர். அவரோ, ‘’சில எழுத்துப் பிழை வந்துவிட்டது அரசு கேட்டா திருத்திக் கொடுக்கப் போகிறோம். இந்த கொள்முதல் எல்லாமே சென்ற வருடமே முடிந்துவிட்டது..’’ என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டார்.

இந்த விவகாரத்தில் உண்மை வெளிவர வேண்டும் என்று அனைத்துக் கட்சித்தலைவர்களும் அறிக்கை வெளியிட்டுள்ளனர். ஆகவே, அமைச்சர் ராஜ் மோகன் பெரியார் நூலகம் உட்பட அனைத்து நூலகங்களுக்கும் நூல் வாங்கியதில் நடைபெற்றுள்ள ஊழல் குறித்து விசாரிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுத்துள்ளார்.

ஆனால், இது மட்டும் போதாது. திருட்டை கண்டுபிடித்தாகிவிட்டது… திருடனையும் கண்டுபிடித்தாகிவிட்டது… அமைச்சரே புகார் கொடுத்துவிட்டார்… உடனடியாக திருடனை கைது செய்து, திருட்டின் விளைவாக இருக்கும் புத்தகங்களை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இந்த பதிப்பகத்திற்கு, புத்தங்களை கொள்முதல் செய்தது யார்? அனுமதித்தது யார்? அதை சரிபார்த்து உள்ளே ஏற்றியது யார்?

நூலகத் தேர்வுக் குழுவை உருவாக்கியது போல ‘போலி’ நூல்களைக் கண்டறிந்து அகற்றும் சிறந்த, அறம் சார்ந்த குழுவைத் தமிழக அரசு மாவட்டம் தோறும் உருவாக்கி, உடனடியாகத் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அத்தனை நூலகங்களிலும் ஆய்வு செய்து அங்கே இருந்துவரும் ‘போலி’ நூல்களை அப்புறப்படுத்த வேண்டும் என்பதுதான் மக்கள் கோரிக்கையாக இருக்கிறது.

இந்த விஷயத்திலும் அமைச்சர் அன்பில் மகேஷ்க்குத்தான் தொடர்பு இருக்கும் என்று தெரியவருகிறது. ஆக, இதிலும் அவர் கைது செய்யப்படுவார் என்றே சொல்லப்படுகிறது.

பெரியார் நூலக ஊழலில் திமுகவுக்கு மரண அடி கொடுத்திருக்கிறார் விஜய். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link