Share via:
ஆட்சியைப் பிடிக்கும் வரையிலும் கல்வி விருது வழங்கும் விழா என்று
மாணவர்கள் மீது அக்கறை காட்டிய முதல்வர் விஜய், ஆட்சிக்கு வந்ததும் பரிசு கொடுப்பதை
தூக்கி வீசிவிட்டார் என்று கடுமையாக விமர்சனம் வந்தன. அதற்கு விஜய் தரப்பில் எந்த பதிலும்
சொல்லப்படவில்லை. எனவே, கடுமையான வேலைப்பளுவால் விருது விழாவை விஜய் மறுத்துவிட்டார்
என்றே அவரது கட்சிக்காரர்களும் நினைத்தார்கள்.
ஆனால், அரசுப் பணிகள் மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் பிஸியாக இருந்ததால், மாணவர்களுக்கான கல்வி விருது வழங்கும் விழா தள்ளிப்போனதே தவிர, இழுத்து மூடப்படவில்லை என்பது
தெரியவந்துள்ளது. இந்த விமர்சனங்களுக்கு எந்த பதிலும் அளிக்கப்படாமல், நேரடியாக விழா
அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்தனை காலமும் விழா ஏற்பாடுகள் அமைதியாக நடைபெற்றுல்ளன.
அதன்படி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தொடர்ந்து நாலாவது வருடமாக 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கான கல்வி விருது வழங்கும் விழா இன்று மதியம் சென்னை நீலாங்கரையில் ஆ.ஆர். கன்வென்ஷன் ஹாலில் நடைபெறுகிறது.
இன்று காலை 11 மணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. அனைவருக்கும்
சிறப்பான முறையில் மதிய உணவு தயாராகிறது. மதியம் 2 மணிக்கு தவெக தலைவர் தளபதி முதல்வர் விஜய் அவர்கள் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
இன்றைய விழாவில் அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொள்கிறார்கள்.
மாணவர்களின் கல்வி சாதனையைக் கொண்டாடும் விழாவை அன்று ரசிகர்களின் தளபதியாக
கொண்டாடியவர், இன்று தமிழகத்தின் வெற்றி முதல்வராக கொண்டாடுகிறார்.
தமிழகத்தின் தலைமகனுக்கு பாச வணக்கம்.

