Share via:
பிக்பாஸ் சீசன் 7 மேக்கிங் வீடியோ எக்ஸ் பக்கத்தில் வெளியாகி ரசிகர்களை கட்டிப்போட்டு எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் ஏற்கனவே 6 சீசன்களை கடந்த நிலையில் தற்போது சீசன்7 அக்டோபர் 1ம் தேதி முதல் தொடங்க உள்ளது. முதல் சீசன் முதல் தொகுத்து வழங்கி வரும் நடிகர் கமல்ஹாசன் ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்திழுத்து விஜய் டிவியின் டி.ஆர்.பி.ரேட்டிங்கை உச்சத்தில் தக்க வைத்துள்ளார்.
அதிலும் குறிப்பாக இந்த முறை சீசன்7ல் இரண்டு வீடு என்ற சமிக்ஞையையும் கொடுத்து ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளார்.
இந்நிலையில் பிக்பாஸ் சீசன்7 மேக்கிங் வீடியோ எக்ஸ் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் நடிகர் கமல்ஹாசனின் பிரமோ ஷூட் மற்றும் படப்பிடிப்பு தளம் போன்றவை இடம்பெற்றுள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்த சீசனில் நடிகர் அப்பாஸ், பப்லு, சந்தோஷ் பிரதாப், நடிகை அம்மு அபிராமி, தர்ஷா குப்தா, பேருந்து ஓட்டுனர் ஷர்மிளா, நடிகை ரச்சிதாவின் கணவர் தினேஷ், ரேகா நாயர் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தகவல்கள் அனைத்தும் உண்மைதானா என்பதற்கான விடை வருகிற அக்டோபர் மாதம் 1ம் தேதி தெரிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

