News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

மருத்துவமனை செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், நிறைய ஏழைகளுக்கு முதல்வரின் மருத்துவக் காப்பீடு அட்டை கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லாத நிலை இருக்கிறது. ஏனென்றால், முதல்வர் மருத்துவக் காப்பீடுக்கு வருமான வரம்பு 1.20 லட்சம் ரூபாயாக மட்டுமே உள்ளது. இதனை இப்போது விஜய் மாற்றியமைத்து மகத்தான சாதனை படைத்திருக்கிறார்.

அதன்படி முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்வதற்கு குடும்ப வருமான வரம்பு 1.20 லட்சம் ரூபாயில் இருந்து 2.50 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் காப்பீட்டு தொகை 5 லட்சம் ரூபாயில் இருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் 5 லட்சம் ரூபாய் வரை பணமில்லாத சிகிச்சையாகவும் மீதியை அரசின் கார்பஸ் நிதி மூலம் ஏற்கப்படும். அதன்படி ஏழைகளுக்கு வழங்கப்படும் 1286 சிகிச்சைகள் + 48 பரிசோதனைகள் இனி இலவசமாகப் பெறமுடியும்.

இதுவரை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்வதற்கு குடும்ப ஆண்டு வருமானம் 1.20 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும் என்று இருந்த காரணத்தால் ஏராளமான ஏழைகள் இந்த கார்டு பெற முடியாத சூழல் நிலவியது.

இனி, ரேஷன் கார்டு மற்றும் என்.டி.ஆர். டேட்டாபேஸில் பெயர் உள்ள, ஆண்டு வருமானம் 2.50 லட்சத்திற்குள் உள்ள அனைத்து குடும்பங்களும் இனி தகுதி பெறும். அதோடு கிராம நிர்வாக அலுவலர், வருவாய்த்துறையின் வருமானச் சான்று மற்றும் குடும்பத் தலைவரின் சுய உறுதிமொழி கொடுத்தால் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ஒரு குடும்பத்திற்கு ஒரு பாலிசி ஆண்டில் 5 லட்சம் ரூபாய் வரை மட்டுமே காப்பீடு இருந்தது. இப்போது முதல்வர் விஜய் அதை 25 லட்சமாக உயர்த்துவதாக அறிவித்தாலும், இதற்கு இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு கூடுதல் கட்டணம் எதுவும் கொடுக்கப்படாது. பொதுத்துறை காப்பீட்டு நிறுவனம் பயனாளிகளிடம் இருந்து ஒரு ரூபாய் கூட கூடுதலாக வாங்கக்கூடாது என்றும் அரசு கடும் உத்தரவு போட்டுள்ளது.

மருத்துவக் காப்பீட்டில் படுக்கை கட்டணம், ஐசியு, நர்சிங், அறுவை சிகிச்சை, மயக்கமருந்து, மருத்துவர் கட்டணம், ரத்தம், ஆக்சிஜன், எக்ஸ்ரே, உணவு, பொது போக்குவரத்து கட்டணம் மருந்துகள் வரை அனைத்தும் இலவசமாகக் கொடுக்கப்படும்.

இந்த வகையில் 1286 மருத்துவ சிகிச்சைகளுடன் 48 நோய் கண்டறியும் பரிசோதனைகளும் ஏழைகளுக்குக் கிடைக்கும். ஒவ்வொரு நாளும் விஜய் மக்களுக்குப் பார்த்துப் பார்த்து நன்மைகள் செய்துவருகிறார். அந்த வகையில் இன்சூரன்ஸ் ஏழைகளுக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரும் வரப்பிரசாதம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link