News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

அதிகாரிகள் ராஜ்ஜியம் நடந்துவிடக்கூடாது என்பதற்காக அவ்வப்போது அதிரடி மாற்றம் செய்துவருகிறது விஜய்யின் த.வெ.க. அரசு. அந்த வகையில்  தென்காசி, கரூர், திருப்பூர் மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 20 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தலைமைச் செயலர் எம்.சாய்குமார் வெளியிட்ட உத்தரவுப்படி தென்காசி மாவட்டத்திற்கு புதிய கலெக்டராக டாக்டர் மோனிகா ராணா நியமிக்கப்பட்டுள்ளார்.  திருநெல்வேலி மாநகராட்சி கமிஷனராக இருந்த மோனிகா ராணா, தென்காசி மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார். இவர் ரஞ்சித் சிங் ஐ.ஏ.ஸ்.க்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்திற்கு புதிய கலெக்டராக முத்துக்குமரன் நியமிக்கப்பட்டுள்ளார்.  கரூர் மாவட்ட கலெக்டராக இருந்த முத்துக்குமரன், இப்போது திருப்பூர் மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார். இவர் டாக்டர் மனிஷ் நர்னாவரே இடத்திற்கு பதிலாக செல்கிறார்.

கரூர் மாவட்டத்திற்கு எஸ்.பிரசன்னா ராமசாமி புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். பிரசன்னா ராமசாமி ஆளுநர் மாளிகையில் பல்கலைக்கழகங்களுக்கான துணை செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பது பேர் ஐ.ஏ.எஸ். ஆக பதவி உயர்வு பெற்றவர்கள், முக்கிய சிறப்பு. மாநில பணியில் (State Service) இருந்து IAS பணிக்கு பதவி உயர்வு பெற்றவர்களுக்கு உடனடியாக பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி கோயம்பேடு மார்க்கெட் நிர்வாக குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த இந்துமதி இப்போது போக்குவரத்து துறையில் அரசு துணை செயலாளராக* நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சி அம்மா உணவகத்தின் மாவட்ட வருவாய் அதிகாரியாக இருந்த சங்கீதா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் (ICDS) இயக்குனர் மற்றும் மிஷன் இயக்குனராகியிருக்கிறார்.

சென்னை மாநகராட்சி மண்டல அதிகாரியாக இருந்த காளிதாஸ் இப்போது  ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குனரகத்தில் கூடுதல் இயக்குனராக (பொது) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கரூர் சப்-கலெக்டராக இருந்த வெங்கடேஷ்வரன், கடலூர் மாவட்டம் சிதம்பரம் சப்-கலெக்டராக மாற்றப்பட்டு  மகப்பேறு விடுப்பில் உள்ள .சுபதர்ஷினி இடத்திற்குச் சென்றுள்ளார்.

திருநெல்வேலி கார்ப்பரேஷன் புதிய கமிஷனராக பிரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இ-ஆளுமை இயக்குனரகத்தில் இணை இயக்குனராக (தொழில்நுட்பம்) இருந்த பிரியா, திருநெல்வேலி மாநகராட்சி கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் டாக்டர் மோனிகா ராணா இடத்திற்கு நியமிக்கப்படுள்ளார்.

தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தில் (ELCOT) பொது மேலாளராக (கொள்முதல்) இருந்த ராஜாகிருபாகரன், எல்காட் நிறுவனத்தின் செயல் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையரகத்தில் இணை ஆணையராக இருந்த சாந்தி, இப்போது சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்படுள்ளார்.

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த் கார்த்திகா இப்போது சமூக நலன் மற்றும் மகளிர் அதிகாரமளித்தல் துறையில் அரசு கூடுதல் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். திருப்பூர் கலெக்டராக இருந்த மனிஷ்  நர்னாவரே இப்போது தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மேலாண் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சமூக நலத்துறை கூடுதல் செயலாளராக இருந்த எஸ்.வளர்மதி இப்போது வெளிநாடு வாழ் தமிழர்கள் மறுவாழ்வு மற்றும் நலத்துறை இயக்குனராகியிருக்கிறார். வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை இயக்குனராக இருந்த சதீஷ் இப்போது பட்டு வளர்ப்புத்துறை இயக்குனராகியிருக்கிறார். சாந்தி அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில், தென்காசி கலெக்டர் ரஞ்சித் சிங் திடீர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. தென்காசி மாவட்டத்தில் குற்றாலம், செயற்கை அருவிகள் விவகாரத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன் கலெக்டர் ரஞ்சித் சிங் மிக கடுமையான நடவடிக்கைகளை எடுத்ததும் பல செயற்கை அருவிகள், தனியார் ரிசார்ட்களுக்கு சீல் வைத்து மூடியதும், சுற்றுலா பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்தவர்கள் மீது அபராதம் விதித்தது என நேர்மையாகவும், தைரியமாகவும் அவர் செயல்பட்டதும் காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால், அரசு தரப்பில் எந்த அழுத்தமும் கிடையாது விரைவில் அவருக்கு புதிய பொறுப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link