News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் வேலைவாய்ப்பு மோசடி புகாரின் அடிப்படையில் திமுகவின் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு 25 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. இரண்டாவது முறையாக லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்துவது முக்கியத்துவம் பெறுகிறது.

திருச்சி தில்லை நகரில் உள்ள கே.என்.நேருவின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் இன்று காலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து மந்தைவெளி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள கே.என். நேருவின் சகோதரர் கே என் ரவிச்சந்திரன் இல்லத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை அதிகாலை முதல் நடைபெற்று வருகிறது

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறையின் கீழ் உதவிப் பொறியாளர்கள், இளநிலைப் பொறியாளர்கள் உள்ளிட்ட 2,538 அரசுப் பணியிட நியமனங்களில் ரூ.634 கோடி வரை லஞ்ச முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி முதற்கட்ட சோதனை நடத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இரண்டாவது முறையாகச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த வழக்குத் தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து கே.என்.நேரு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்தது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இந்த அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே பள்ளிக்கல்வித் துறையில் ரூ.100 கோடி ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், அடுத்து நேருவை கைது செய்வதற்காகவே இந்த ரெய்டு நடப்பதாக சொல்லப்படுகிறது.

மேலும் விலைவாசி உயர்வுக்கு எதிராக வரும் 31ம் தேதி திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுக்க நடைபெறுகிறது. இதற்கு நேரு பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்துவந்த நிலையில், அவருக்கு செக் வைக்கும் வகையில் நடவடிக்கை என்கிறார்கள்.

எப்படியோ ஊழல் குற்றவாளிகள் ஒவ்வொருவராக ஜெயிலுக்குப் போனால் சரிதான்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link