Share via:
ஒரு யூனிட் மின்சாரம் 41.50 ரூபாய்க்கு கொள்முதல் செய்வதற்கு ஒப்பந்தம்
போடப்பட்டிருப்பதாகவும், இது ஒரு வரலாற்று கேவலம் என்றும் திமுகவினர் தொடர்ந்து பொய்
செய்தி பரப்பி வந்தனர்.
அதேபோல் அதிமுகவினரும், ’கஜானா காலி என்று நீலிக் கண்ணீர் வடிக்கும்
அதே வேளையில், வெளிச்சந்தையில் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 41.50-க்கு இந்த
வெட்டி அரசு கொள்முதல் செய்யப்போவதாக வெளிவரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது’’ என்று
அறிக்கை வெளியிட்டது.
உண்மை என்னவென்றால், 2026-ம் ஆண்டு டிசம்பர் முதல் 2027-ம் ஆண்டு
மே மாதம் வரையிலான காலகட்டத்தில் உச்ச நேர மின் தேவைக்கு 2100 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்
செய்ய டெண்டர் கோரப்பட்டது. அதில் ஒரு யூனிட் மின்சாரத்துக்கு நிறுவனங்கள் ரூ.41.50
கோரியிருந்தது.
ஏற்கெனவே 37 ரூபாய்க்கு மின்சாரம் வாங்கும் போது கடும் அதிர்வலைகளை
ஏற்படுத்திய நிலையில் ரூ.41.50 மின்சாரம் கொள்முதல் செய்யவுள்ளதாக வெளியான தகவல் பெறும்
சர்ச்சையானது. அதாவது, டெண்டர் நிலையிலேயே மின்சாரம் வாங்கப்பட்டுவிட்டதாக பொய் செய்தி
பரப்பப்பட்டது.
இதுகுறித்து அமைச்சர் நிர்மல்குமார், ‘’டெண்டரில் கொடுக்கப்பட்டிருக்கும்
ரூ.37 முதல் ரூ.41 வரையிலான விலையில் மின்சாரத்தை கொள்முதல் செய்யப் போவதில்லை.
இன்று டெண்டர் திறக்கப்பட்ட நிலையில், பல நிறுவனங்கள் மிக அதிக விலையைக் குறிப்பிட்டுள்ளன.
அடுத்த 3 மாதங்களுக்குத் தேவையான மின்சாரத்தைச் சமாளிக்க போதுமான
மின்சாரம் நம்மிடம் உள்ளது. அடுத்த கோடைக்காலத் தேவைக்காக முன்கூட்டியே மின்சாரத்தைக்
கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ள இந்த
விலைகள் நியாயமற்றவை. எனவே, இந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அடுத்த 20 ஆண்டுகளுக்கான மின்சாரத் தேவையைப் பூர்த்தி
செய்யும் வகையில், நடுத்தர மற்றும் நீண்டகால டெண்டர்களை வெளியிட உள்ளோம். எனவே, இனி
அதிக விலை கொடுத்து எரிவாயு மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைக் கொள்முதல் செய்யப்
போவதில்லை. கீழே குறிப்பிடப்பட்டுள்ள டெண்டரை ரத்து செய்யவும் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளேன்’’
என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

