News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

அன்பில் மகேஷ் கைதின் போது கரூர் சம்பவம் குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரத்தில் தலைமறைவாக இருந்த திமுக கவுன்சிலர் சரவணனை விழுப்புரத்தில் வைத்து போலீஸ் கைது செய்து சிறப்பான சம்பவம் செய்திருக்கிறது.

தவெக அரசு அமைக்கப்பட்டதில் இருந்து முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசுவது திமுகவினரின் வாடிக்கையாகப் போய்விட்டது. சட்டத்தின் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

400 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் புழல் சிறையில் அன்பில் மகேஸ் அடைக்கப்பட்ட நேரத்தில், புழல் சிறை வாயிலில் நின்றுகொண்டு அவதூறாக கோஷமிட்டர் வேலூர் மாநகராட்சி வார்டு 12 திமுக கவுன்சிலர் டிட்டா. இவர் வேலூர் மாவட்ட திமுக மாமன்ற உறுப்பினரும், வேலூர் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளருமாக இருக்கிறார்.

இவர் அன்றைய தினம், ’’கரூரில் அன்னைக்கே அவனைப் போட்டிருந்தால் இந்த நாள் வந்திருக்குமா தலைவரே…?’’ என்று தவெக தலைவரும் முதல்வருமான விஜய்க்கு எதிராக பகிரங்க மிரட்டல் விடுத்தார்.  

அவர் பேசிய விவகாரம் சமூகவலைதளத்தில் வைரலானதும் தி.மு.க கவுன்சிலர் ‘டீட்டா சரவணன்’ மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, இதையடுத்து அவர் தலைமுறைவாகிவிட்டார். எனவே, அவரை கைது செய்வதற்கு தனிப்படை அமைக்கப்பட்டது.

நண்பர்களுடன் பெங்களூரு செல்வது போன்று போக்கு காட்டிவிட்டு, விழுப்புரத்தில் தலைமறைவாக இருந்த டீட்டா சரவணன் தனிப்படை போலீசார் சற்று முன் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவரை சென்னைக்கு அழைத்துவருகிறார்கள்.

வில்லங்கமாகப் பேசிய சரவணன் கைது செய்யப்பட்ட தகவல் விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறது. அவர் சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பு விசாரணையில் பாத்ரூமில் வழுக்கி விழுவாரா, அவரது கைக்கும் காலுக்கும் மாவுக்கட்டு போடப்படுமா என்று தவெக தொண்டர்கள் ஆசையுடன் காத்திருக்கிறார்கள்.

அப்படியே நடக்கட்டும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link