Share via:
வழக்கமாக தீபாவளி வந்தாலே அதிகாரிகள் வசூல் வேட்டையைத் தொடங்கிவிடுவார்கள்.
இந்த ஆண்டும் வழக்கம்போலவே, இப்படி வசூல் வேட்டை நடப்பதாக புகார் வந்ததையடுத்து, அரசு
அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இதில், கணக்கில்
வராத லட்சக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
தீபாவளியை முன்னிட்டு லஞ்சம் கேட்பதாகவும், பரிசுப் பொருட்கள்
பெறப்படுவதாகவும் புகார்கள் எழுந்ததன் அடிப்படையில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப்
பிரிவு போலீஸார் தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் நகர்
ஊரமைப்பு அலுவலகங்கள் உள்ளிட்ட 43 இடங்களில் அரசு அலுவலகங்களில் நேற்று மாலை திடீர்
சோதனை நடத்தினர்.
அரசு அலுவலகங்களில் கதவுகள் மூடப்பட்டு, ஊழியர்களின் செல்போன்கள்
பெறப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் ரூ.2 லட்சம் கணக்கில்
வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில்
ரூ.1.49 லட்சம் தொடர்பான சந்தேகத்துக்குரிய யுபிஐ பணப் பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டதாகக்
கூறப்படுகிறது.
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் ரூ.9,000 ரொக்கம் கைப்பற்றப்பட்டது.
மேலும் திருவாரூரில் 65 ஆயிரம், மயிலாடுதுறையில் 29 ஆயிரம், அரியலூரில் 20 ஆயிரம் கணக்கில்
வராத பணம் கைப்பற்றப்பட்டது. மதுரை மேலூர், சிவகங்கை தேவகோட்டை, தேனி சின்னமனூர், பரமக்குடி,
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், வேலூர், சேலம், தருமபுரி, நாமக்கல், ஓசூர், ஈரோடு உள்ளிட்ட
பல்வேறு பகுதிகளில் உள்ள நகராட்சி, மாநகராட்சி, மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகங்களில்
சோதனை நடைபெற்றது.
மேலும், தஞ்சாவூர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி,
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் என மொத்தம் 40-க்கும் மேற்பட்ட இடங்களில்
சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் பல அலுவலகங்களில் இருந்து லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்
செய்யப்பட்டுள்ளது.
திருச்சியில் ரூ.1.23 லட்சம், பெரம்பலூரில் ரூ.1.25 லட்சம், புதுக்கோட்டையில்
ரூ.37 ஆயிரம், கடலூரில் ரூ.1.5 லட்சம், பொன்னேரி நகராட்சி அலுவலகத்தில் ஜிபே மூலம்
ரூ.1.44 லட்சம் பரிவர்த்தனை ஆகிய சந்தேகத்துக்குரிய யுபிஐ பணப் பரிவர்த்தனைகள் குறித்தும்
விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் 43 இடங்களில் லஞ்ச ஒழிப்பு
சோதனை. அரசு அலுவலகங்களில் ரெய்டு .8.21 லட்சம் ரொக்கம் சிக்கியது கணக்கில் வராத
1.25 கோடி Gpay பரிவர்த்தனைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை வரையிலும் இதேபோல் சோதனை என்றால் நடக்கும் என
தெரியவந்திருப்பதால் அதிகாரிகள், அலுவர்கள் கலக்கத்தில் உள்ளனர். இந்த சோதனைகள் லஞ்சம்
வாங்கும் அரசு ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
லஞ்சத்தை ஒழித்தே தீருவது என்பதில் விஜய் உறுதியாக இருக்கிறார்.

