Share via:
அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய அரசு ஊழியர்களை ஒரே நாளில்
டிஸ்மிஸ் செய்து பதறவைத்தார் ஜெயலலிதா. அதே பாணியில் அரசிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு,
அரசையே விமர்சனம் செய்யும் ஊழியர்களுக்கு விஜய் கடும் கட்டுப்பாடுகள் விதித்திருக்கிறார்.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் அரசின் கொள்கைகளை பொதுவெளியில் விமர்சிக்கக்கூடாது
என வலியுறுத்தி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் சுற்றறிக்கை
வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையின் அடிப்படையில் அரசு ஊழியர்கள் மத்திய அல்லது மாநில
அரசின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை பொதுவெளியிலோ, ஊடகங்களிலோ பாதகமாக
விமர்சிக்கக்கூடாது. ஊடகங்கள் என்பதில், செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி, *சமூக
வலைதளங்கள், மீம்ஸ் (Memes)* போன்றவை மற்றும் பொதுக்கூட்டங்களும் அடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற அரசுகளுடனான நல்லுறவை பாதிக்கும் வகையிலான கருத்துக்களை எக்காரணம்
கொண்டும் வெளியிடக்கூடாது. அதோடு விமர்சனக் கூட்டங்களில் பங்கேற்கக்கூடாது: அரசை விமர்சிக்கும்
தீர்மானங்கள் அல்லது உரைகள் இடம்பெறும் அலுவல் சாராத கூட்டங்களில் அரசு ஊழியர்கள் பங்கேற்கக்கூடாது.
இந்த விதிகளுக்கு மாறாகச் செயல்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்கள்
மீது அரசு ஊழியர் நடத்தை விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
அதாவது விளக்கம் கேட்டு கடிதம் (Memo), துறை ரீதியான விசாரணை, சஸ்பெண்ட் வரை நடவடிக்கை
பாயும் அபாயம் உள்ளது.
சுகாதாரத்துறையில் மட்டும் இந்த அறிக்கை வெளியிடப்பட்டாலும், விரைவில்
அனைத்து துறைகளுக்கும் இது பொருந்தும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதை அரசு ஊழியர்கள் எதிர்பார்களா அல்லது ஏற்றுக்கொள்வார்களா..?
இந்த உத்தரவு தொடருமா அல்லது திரும்பப்பெறப்படுமா?

