News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

தண்ணீரின் முக்கியத்துவத்தை அனைவரும் உணரும் வகையில் பல படங்களில் கருத்து தெரிவித்திருக்கிறார் விஜய். அதை ஆட்சிக்கு வந்தபிறகும் தொடரும் வகையில், மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு குறித்த துளி இலச்சினையை திறப்புவைத்து, மழைநீர் சேமிப்பை வலியுறுத்தியிருக்கிறார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் கொண்டுவரப்பட்ட மழைநீர் சேகரிப்புத் திட்டம் சிறப்பானது என்றாலும், அதன் பின்னர் வந்த அரசுகள் அதில் கவனம் செலுத்தவே இல்லை.  

இந்த நிலையில் மழைநீர் சேகரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் முதல்வர் விஜய் அதிரடி அரசாணை வெளியிட்டுள்ளார். விஜய் உத்தரவுப்படி  மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை புதுப்பித்து, அதை ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கான உத்தரவை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி பிறப்பித்துள்ளார்.

அதன்படி முதல் கட்டமாக அரசு அலுவலகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், வீடுகளில் உள்ள பழைய மழைநீர் தொட்டிகளை ஆய்வு செய்து, சுத்தம் செய்து, தூர் வாரி, உடைந்ததை சரி செய்வதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ரூப் டாப் ஹார்வெஸ்ட் மற்றும் கிரவுண்ட் வாட்டர் ரீசார்ஜ் என்பதை  புதிய கட்டிடங்களுக்கு மட்டுமல்ல, பழைய கட்டிடங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் மற்றும் மக்களிடம் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதை அவர்களின் சொந்த பொறுப்பாக மாற்றுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக  தலைமைச் செயலாளர் தலைமையில் மாநில அளவிலும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவிலும் குழுக்கள் அமைத்து தொடர் கண்காணிப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் அனைத்து அரசு கட்டிடங்களிலும் மழைநீர் கட்டமைப்புகள் முழுமையாக செயல்படுகிறதா என ஆய்வு செய்யப்பட்டு மொட்டை மாடி, கால்வாய்கள், வடிகட்டும் அறைகள், செறிவூட்டும் குழிகள் சுத்தம் செய்யப்பட இருக்கிறது.

அதோடு சாலைகள், பொது இடங்களில் இருந்து வரும் மழைநீரை சேமிக்கத் தேவையான வசதிகள் அமைக்கப்படும்.  புதிய குடிநீர் திட்டங்களில் மழைநீர் சேகரிப்பு ஒரு பகுதியாகவே இருக்கும். ரேடியோ, டி.வி. மட்டுமின்றி சுவர் ஓவியங்கள், பேருந்து விளம்பரங்கள் செய்யப்படும்.

தெருமுனை பிரச்சாரம், குறும்படங்கள், பள்ளி, கல்லூரிகளில் பயிற்சி! – சுய உதவிக்குழுக்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் மூலம் வீடு வீடாக பிரச்சாரம் மேற்கொள்ளவும் சிறப்பாக இதை கடைப்பிடிப்பவர்களுக்கு  அரசு விருது வழங்கவும் திட்டமிட்டுள்ளது.

சிறந்த மாவட்டம், சிறந்த நகராட்சி, ஊராட்சி, சிறந்த பள்ளி, கல்லூரி,  சிறந்த அரசு அலுவலகம், சிறந்த குடியிருப்போர் சங்கம் நிலத்தடி நீர்மட்டத்தை கண்காணித்து, எங்கு தண்ணீர் அதிகரித்துள்ளது என்று புகைப்படத்துடன் ஆதாரம் மூலம் விருது வழங்கபடவுள்ளது. வீட்டுக்கு ஒரு மழைநீர் தொட்டி கட்டாயம் என்ற நிலையை கொண்டு வருவதே முதல்வர் விஜய் அரசின் இலக்கு.

இதனை மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் சேப்பாக்கம் எழலகம் வளாகத்தில், பொதுமக்களுக்கு மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை உணர்த்த, சுமார் 800 சதுர அடியில் ஒரு முன்மாதிரி வீடு கட்டப்பட்டுள்ளது.

இந்த மாதிரி இல்லத்தில் வீட்டு மொட்டை மாடியில் பெய்யும் மழைநீரை சேகரிக்கும் குழாய் அமைப்பு, சேகரிக்கப்பட்ட தண்ணீரை மணல், ஜல்லி, வலை கொண்டு வடிகட்டும் நவீன ஃபில்டர் அமைப்பு இருக்கும்.

மேலும் வடிகட்டிய நீரை நேரடியாக ஆழ்துளை கிணறு மற்றும் நிலத்தடி நீர் மட்டத்திற்கு கொண்டு செல்லும் ரிசார்ஜ் பிட் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை 15 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரத்துக்குள் அமைக்கலாம் என்பதை செயல்முறையாக காட்டப்பட்டுள்ளது.

புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு மழைநீர் சேகரிப்பு அமைத்தால் சிறப்பு மானியம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தண்ணீரின் முக்கியத்துவத்தை விஜய் உணர்த்துவது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

விஜய் கையில் விருது வாங்குவதற்காகவே பலரும் ஆர்வத்துடன் முன்வருவார்கள் என்று நம்பலாம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link