News

கன்னடர் மூலம் காவிரிக்கு விஜய் ராஜதந்திரம்.? வெங்கட் நியமன பஞ்சாயத்து

Follow Us

எங்களுக்கு தன்மானம் முக்கியம், அந்த தன்மானத்தை காக்க சரியான முடிவு எடுப்பேன் என்ற வைகோ இன்று திமுக கூட்டணியில் இருந்து வெளியே வந்திருக்கிறார். தமிழ்நாடு அரசியலில் சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுக்கின்ற தலைவராக வைகோ முதலிடத்தில் இருக்கிறார் என்று அவரது கட்சியினரே கவலைப்படுகிறார்கள்.

ராஜினாமா செய்தால் அந்த 2 உறுப்பினர்களை ஜெயிக்க வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு என்று விஜய் என்னிடம் உத்தரவாதம் அளித்தார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியிருக்கும் நிலையில், இரண்டு எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்வதற்குத் தயாராக இல்லை என்பது பரபரப்பாகியுள்ளது. இரண்டு எம்.எல்.ஏ.க்கள் இல்லாமல் விஜய்யை எப்படி பார்ப்பது என்று தெரியாமல் தவிக்கிறார் வைகோ.

அதோடு, துரை வைகோ நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தால்… நானும் ராஜினாமா செய்ய தயார் என்று திமுக சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் ஒரு நிபந்தனை வைத்திருக்கிறார்.

வைகோவின் முடிவு குறித்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ‘’படிப்பறிவும், பேச்சும் மட்டுமே ஒருவரை வெற்றிகரமான தலைவனாக்கி விடாது என்பதற்கு வைகோ ஒரு உதாரணம் ! எடுக்கும் முடிவுகளே முடிசூடுகிறானா அல்லது முடிந்துவிடுகிறானா என்பதை தீர்மானிக்கிறது ! இவர் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் கட்சியின் முடிவை நோக்கியே 30 ஆண்டுகளாக அமைகிறது.

 மறுமலர்ச்சி திமுக என்று துவங்கி, மறுபடியும் திமுக என்று மாறி தற்போது மகன் திமுக என்று முடிவுக்கு வருகிறது மதிமுக ! இன்று திமுகவை என்னவெல்லாம் சொல்லி வெளியே வருகிறாரோ அதையே சில வருடம் கழித்து தவெக வை சொல்லி வெளியே வருவார். நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன், கோவை காமராசபுரம் பாலன், மேலப்பாளையம் ஜஹாங்கீர், உப்பிலியாபுரம் வீரப்பன் ஆகியோரின் ஆன்மாக்கள் அமைதிபெறட்டும்’’ என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

பதவிக்காக வைகோ சாயம் இழந்துபோயிருக்கிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link