News

கன்னடர் மூலம் காவிரிக்கு விஜய் ராஜதந்திரம்.? வெங்கட் நியமன பஞ்சாயத்து

Follow Us

அதிமுகவில் 6வது எம்.எல்.ஏ.வாக கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதிமுகவில் இனி எதிர்காலம் இல்லை என்பதால் புதுக்கோட்டை விஜயபாஸ்கரை முந்திக்கொண்டு இவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமாவை கைப்பட எழுதி சபாநாயகரிடம் கொடுத்தார். இதன் மூலம் அதிமுகவில் இருந்து விலகி அவர் தமிழக வெற்றி கழகத்தில் இணையும் 6வது எம்.எல்.ஏ.வாக மாறியிருக்கிறார்.

இவர் மீது 100 கோடி ரூபாய் மதிப்பிலான நில அபகரிப்பு வழக்கில் இவருக்கு கடந்த ஆண்டு வருமானவரித்துறை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது அதற்கு முன்பு கரூரில் 20 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை மோசடியாக எழுதி வாங்கியதாக எழுந்த நில மோசடி தொடர்பான வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்

விஜய பாஸ்கர் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதாக பேரவை தலைவர் ஜேசிடி பிரபாகர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பழைய பொறுப்பு கொடுக்கவில்லை என்று அதிமுகவிலிருந்து வெளியே செல்பவர்களை எடப்பாடி தடுக்கவில்லை. போகிறவர்கள் போகட்டும், துரோகிகள் வெளியேறுவது நல்லது என்ற ஹேப்பி மூடிலே அவர் இருக்கிறார் என்கிறார்கள்.

அதேநேரம்,  ‘’எடப்பாடி பழனிசாமிக்கு அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தளவாய் சுந்தரம் பொன்றோர் மட்டுமே அவருக்கு தேவை. அனைவரையும் வெளியே அனுப்பி விட்டு, வட்டிக்கு விட்டிருக்கும் பணத்தை காப்பாற்ற இந்த கட்சியை பயன்படுத்திக் கொள்வது மட்டுமே இபிஎஸ் நோக்கம். பணத்தை பத்திரமாக மகனிடம் ஒப்படைத்து செல்ல வேண்டும். இதை தவிர அவருக்கு வேறு லட்சியங்கள் இல்லை’’ என்று சவுக்கு சங்கர் விமர்சனம் வைக்கிறார்.

விஜய்க்கு சுக்ரதிசை

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link