Share via:
முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்ளும் திருமணங்களில் எல்லாம் விஜய் ஆட்சிக்கு எதிராக கடுமையாகப் பேசிவருகிறார். அந்த வகையில், விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று பேசப்பட்ட ஸ்டாலினுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது தவெக ஐ.டி. விங்.
தவெகவின் ஆவேச அறிக்கையில், ‘’எம்.ஜி.ஆர். தி.மு.க.வை ஒரு தீயசக்தி என்று அன்று சொன்னவர் எம்.ஜி.ஆர். தான் உயிரோடு இருக்கும்வரை தி.மு.க.வைக் கூப்பிலேயே உட்கார வைத்திருந்தார் எம்.ஜி.ஆர். என் நண்பர் எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் இருந்து வந்ததும் ஆட்சியைத் திருப்பித் தந்துவிடுகிறேன். அதுவரை என்னிடம் ஆட்சியைக் கொடுங்கள் என்று தி.மு.க.வைக் கெஞ்ச வைத்தார் எம்.ஜி.ஆர்.
சட்டம் ஒழுங்கு டிஜிபியை நியமிக்காமல் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கையே சந்தி சிரிக்க வைத்தவரும் இன்றைய நிலைக்கு ஆழமாய் விதை போட்டவரும் ஸ்டாலின் சார்தான். ஆனால், எல்லாவற்றையும் மறந்துவிட்டு, இன்று ஏதோ தன்னால் தமிழகம் பாழ்படவே இல்லை என்பதுபோலப் பேசித் தன் நகைச்சுவைத் திறனைக் காட்டுகிறார்.
இந்த நிலையில், எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம். மூன்று வருடத்தில் வரலாம். ஆறு மாதத்தில்கூட தேர்தல் வரலாம் என்று பொறாமையும் விரக்தியும் பொங்கப் பேசுகிறார் ஸ்டாலின் சார். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருப்பதை மறந்துவிட்டு வாய்க்கு வந்ததைப் பேசுகிறார். மக்கள் தீர்ப்பை அவமதிப்பு செய்கிறார்.
ஆட்சி அதிகாரத்தை இழந்த விரக்தியில் விம்முகிறார். வெடிக்கிறார். துடிக்கிறார். ஸ்டாலின் சார் என்னதான் ஆலாய்ப் பறந்தாலும் அங்கலாய்த்தாலும் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டாலும் இனி வருகின்ற ஒவ்வொரு தேர்தலிலும் திமுக 100% சதவிகிதம் துடைத்தெறியப்படப் போவது உறுதி’’ என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு தவெக ஐடி விங் உதயநிதிக்கு எதிராக வெளியிட்ட முந்தைய அறிக்கை கடும் விமர்சனத்துக்கு ஆளானது. அதில், ‘’கொத்தூஸ் கூட்டதோட கத்தூஸ் நிகழ்ச்சிங்க எல்லாம் கழுவப்படாத க*கூஸா மாறிகிட்டு வருது. சட்டசபைய கலாய்ச்சா சட்டம் தன் கடமையைச் செய்யும்கறதுகூட தெரியாம …????. போலீஸ் வண்டிச் சத்தம் கேட்டாலே வீட்ல ஆள் இல்லன்னு சொன்ன கூட்டம், குலைநடுங்கிப் போயி குமுறிக் கதறி நாறிப்போயி நின்ன வரலாற நாடே அறியும். ஆனா, கைப்புள்ள கணக்கா இப்ப வந்து சட்டசபை சட்டம்கூட தெரியாம கதறிகிட்டு இருக்குதுங்க.
சொல்ற ஊழல் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லுங்கன்னா லொஜக்கு வஜக்கு புஜக்குன்னு நக்கல் நையாண்டியா பேசுறதா நெனச்சி காமெடி கிச்சடி கிண்ற கூட்டத்துக்கே இவ்ளோ இருந்தா…???? உங்க உதறல்நிதி ஒருபக்கம் துபாய் குறுக்கு சந்துல நின்னுக்கிட்டு அரசியல் துப்பறிவாளன் வேலைய பாக்கறாரு. டீம்கா கட்சிய ஃபாரீன்ல நடத்த லொக்கேஷன் பாத்துக்கிட்டு இருக்காரு.
உங்க திகார் கூஜாவுக்கு வேற கைப்பிடியும் காதும் கழண்டு கீழ விழுந்ததால, மற கழண்டுபோயி கத்திகிட்டு சுத்துறதப் பார்த்தா… அய்ய்யோ அய்ய்யோ… காமெடி ரகம்தான். அல்ட்ரா புல்ட்ரா ஆரோமாடிஸ்கு புஸ்கு அரசியல் செய்யற தீயசக்தி டீம்கா நெலமய பாத்து டீக்கடை பாய்லர்கூட கொதிக்கறத நிறுத்திட்டு குறட்ட விடுற சத்தத்துல சிரிக்குது. புல்லட் சைலன்ஸர்கூட புஹா புஹான்னு புகை விட்டுச் சிரிக்குது.
உங்க கன்றாவிக் கழக வேலைய எல்லாம் இத்தோட நிறுத்திக்கங்க. இல்லன்னா உண்மையான Gen Z கூட்டம் இறங்கி அடிச்சா, உங்க top எகிறி bottom பதறி பவளவிழா பாப்பா நடுங்கி, எறும்புக் குழிக்குள்ள இறங்கிப் பதுங்கி… இது நடக்கத்தான் போகுது. இது தேவையா?. இதெல்லாம் நடக்காம இருக்கணும்னா அயனாவரத்துல அரசாங்க ஆஸ்பத்திரி இருக்கு. அட்மிஷன் ஆகி உடம்பையும் மனசையும் பாத்துக்கங்க…’’ என்று கிண்டல் செய்திருக்கிறார்கள்.
புதுரூட் அரசியல் புஹா புஹான்னு சிரிக்குது.