News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

முதல்வராக ஸ்டாலின் இருந்த வரையிலும் இந்து பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்ல மாட்டார். இதிலும் விஜய் ஆட்சியில் மாற்றம் வந்துவிட்டது. கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தொடர்ந்து மதச்சார்பற்ற முறையில் அனைத்து மதங்களையும் சமமாக பாவித்து மாற்றத்திற்கான ஒரு அரசை தமிழகத்தில் நடத்தி வரும் தமிழக முதல்வர் தளபதி ஜோசப் விஜய் சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் தமிழக மக்களுக்கு தெரிவித்துள்ளார்.

அவரது வாழ்த்தில், ‘’நம் வாழ்வின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்கும் கருவிகள், வாகனங்கள் மற்றும் நாம் செய்யும் தொழில் என அனைத்தையும் இறைவனாகப் போற்றி, உழைப்பின் உயர்வையும், தொழிலின் மேன்மையையும் போற்றும் ஆயுத பூஜை நன்னாளையும், கல்வி, கலை, தொழில் என புதிதாகத் தொடங்கும் அனைத்து முயற்சிகளையும் சிறக்கச் செய்யும் வெற்றித் திருநாளாம் விஜயதசமி நன்னாளையும் கொண்டாடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்திருநாட்கள், அனைவரின் வாழ்விலும் புதிய நம்பிக்கையையும், வளத்தையும் கொண்டு சேர்க்கட்டும்! நன்மைதரும் புதிய முயற்சிகளை முன்னெடுத்து, கல்வியிலும், தொழில் வளர்ச்சியிலும் மேன்மையுற்று, வெற்றித் தமிழகத்தைப் படைத்திடுவோம்! ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கட்டும்! அனைவரது வாழ்விலும் நலமும், வளமும் பெருகட்டும்..’’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அனைவருக்கும் நல் வாழ்த்துகள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link