Share via:
வரும் தீபாவளி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டு மக்களுக்கு
முதல்வர் விஜய் சூப்பர் டிரீட் கொடுக்கப்போவதாக செய்திகள் வெளியகின்றன.
ரேஷன் கடைகள் மூலம் இலவச தீபாவளி மளிகைப் பொருட்கள் வழங்குவது
குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாக வெளியாகியுள்ள தகவல், மக்களிடையே எதிர்பார்ப்பை
ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளி பண்டிகையொட்டி, ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, எண்ணெய்
உட்பட 21 பொருட்கள் அடங்கிய இலவச மளிகை தொகுப்பு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக
தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூட்டுறவுத் துறை அமைச்சர் வ.காந்திராஜ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
அதில், தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 2.25 கோடி ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு
21 பொருட்கள் அடங்கிய இலவச மளிகைத் தொகுப்பு வழங்கவும், அதில் என்னென்ன பொருட்கள்
இடம்பெற வேண்டும் என்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
அனைத்தையும் இறுதி செய்து முதல்வரின் ஒப்புதல் பெற்று தீபாவளிக்கு
இந்ததொகுப்பை வழங்க பரிசீலனை செய்துவருவதாக கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேபோல் வரும் தைப்பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை சார்பில் வெளியிட்ட அரசாணையில்,
‘’நெசவாளர்களுக்கு பொங்கல் 2027 வேட்டி, சேலை திட்டத்திற்கு புதிய இரக வேட்டி, சேலைகளை
உற்பத்தி செய்யும் நெசவாளர்களுக்கான கூலி அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்த *ரூ.300.00 கோடி* நிதி ஒப்பளிப்பு
செய்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான
கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களின் சுமை குறையட்டும்… ஒவ்வொரு இல்லத்திலும் தீபாவளி மகிழ்ச்சி
நிறையட்டும். விஜய் ஆட்சியில் மக்களுக்கு நல்ல யோகம்தான்.

