Share via:
கோவைக்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்க்கு மேளதாளங்கள் முழங்க
வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது. ரோடு ஷோவில் வருகை தந்த விஜய்க்கு மேள தாளங்களுடன்,
பூக்களை தூவியும், உற்சாக முழக்கங்களை எழுப்பியும் அவர்கள் வரவேற்பு அளித்தனர்.
கோவை காந்திபுரத்தில் 300 கோடி ரூபாய் மதிப்பில் பெரியார் அறிவுலகம்
என்ற பெயரில் நூலகம் 1 லட்சத்து 98 ஆயிரம் சதுரடி பரப்பளவில் 7 தளங்களுடன் பிரமாண்டமாக
கட்டப்பட்டு உள்ளது. பெரியார் நூலகத்தை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் விஜய் இன்று
காலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு கோவை விமான நிலையம் வந்தார். அங்கு
அவருக்கு அமைச்சர்கள், கலெக்டர், அதிகாரிகள் மற்றும் த.வெ.க.வினர் வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அவர், அவினாசி ரோடு வழியாக விழா நடைபெறும் காந்திபுரத்துக்கு
10 கிலோ மீட்டர் தூரம் ரோடு ஷோ சென்றபடி மக்களை சந்தித்தார். முதலமைச்சராக விஜய், பதவியேற்ற
பின் கோவையில் நடைபெறும் அரசு விழாவில் முதன்முறையாக பங்கேற்பதால் அவரை வரவேற்கவும்,
பார்க்கவும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் எக்கச்சக்கமாக கூடியிருந்தனர்.
அவினாசி ரோடு வழியாக விழா நடைபெறும் காந்திபுரத்துக்கு 11.4 கிலோ
மீட்டர் தூரம் ரோடு ஷோ சென்று பொதுமக்களை சந்தித்து வருகிறார். அதோடு, விஜய் பெரியார்
அறிவுலகத்தைத் திறந்துவைப்பதை திமுகவினர் கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார்கள். இதற்கு
தவெக ஐடி விங் பதிலடி கொடுத்துள்ளது.
அதில், ‘’அறிவுத் திருக்கோவில்களை உருவாக்கினோம் என்று தம்பட்டம்
அடிக்கும் பண்ணையாரே… மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடியில் திறந்து வைக்கப்பட்ட
ஆரம்பப் பள்ளி ஒன்றில் சுவரில் விரிசல் விழுந்து, தரை பெயர்ந்து, திராவிட மாடலின் தில்லுமுல்லுகளை
வெளிச்சம் போட்டுக் கொண்டிருக்கிறதே! இதற்குப் பதில் இருக்கிறதா? அரசுத் திட்டங்களுக்கு
திமுக ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு நீங்கள் ஒன்றும் உங்கள் அப்பா வீட்டு பணத்தைப் பாக்கெட்டிலிருந்து
எடுத்துச் செலவு செய்யவில்லை என்பதை மிகவும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஸ்டிக்கர் ஒட்டி கிரிடிட் ஸ்டீல் செய்ய முனையும் டம்மி டாடி அவர்களே,
உங்களின் நிர்வாகத் திறனின்மையால் மாநிலமெங்கும் பரவிக் கிடக்கும் போதைப்பொருள் கலாச்சாரத்தால்
இளைய தலைமுறையினர் சீரழிவதற்கும், அதனால் விளையும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கும்
பொறுப்பேற்க வக்கிருக்கிறதா? இன்செக்யூரிட்டியில் உழன்று புலம்பாமல், வீட்டில் நன்றாக
உண்டு, உறங்கி ஓய்வெடுங்கள்’’ என்று செம நக்கல் செய்திருக்கிறார்கள்.

