Share via:
சென்னை மக்களின் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்தும் வகையில்,
₹3,108 கோடி
மதிப்பிலான ரிங் மெயின் திட்டத்திற்கு நாளை முதல்வர் விஜய் அடிக்கல் நாட்ட இருப்பது
பரபரப்பாகியுள்ளது.
சென்னை மாநகர மக்களின் நீண்ட நாள் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர
தீர்வு காணும் வகையில், ₹3,108 கோடி மதிப்பிலான மெகா குடிநீர்
திட்டத்திற்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நாளை அடிக்கல் நாட்டுகிறார் என்பது தெரியவந்துள்ளது.
இதுவரை சென்னைக்கு பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில்
இருந்து நேரடி குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. ஒரு இடத்தில் குழாய் உடைந்தால்,
ஒட்டுமொத்த ஏரியாவுக்கும் தண்ணீர் கட். அதை மாற்றி, சென்னையை சுற்றி வளையம் போல்
110 கி.மீ நீளத்திற்கு ராட்சத குடிநீர் குழாய் அமைக்கப்படுகிறது. இதனுடன் அனைத்து நீர்த்தேக்கங்களும்,
கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களும் இணைக்கப்படும்.
இதனால் ஒரு ஏரியில் தண்ணீர் இல்லாவிட்டாலும், மற்றொரு ஏரி அல்லது
கடல்நீர் நிலையத்தில் இருந்து வளையம் வழியாக தண்ணீர் வரும். இனி கோடையிலும் தட்டுப்பாடு
இல்லை. அதோடு ஒரு இடத்தில் குழாய் உடைந்தாலும், மறுபக்க வளையம் வழியாக தண்ணீர் திருப்பி
விடப்படும். எனவே, பைப் உடைந்தால் தண்ணீர் இல்லை என்ற நிலை வராது
மேலும், பராமரிப்புக்கு அவ்வப்போது 2 நாள், 3 நாள் குடிநீர் நிறுத்தப்படும்
சூழல் இனி கிடையாது. அதோடு வடசென்னை முதல் தென் சென்னை ஒ.எம்.ஆர். வரை அனைத்து பகுதிகளுக்கும்
ஒரே சீரான வேகத்தில் குடிநீர் கிடைக்கும். மாடியில் தண்ணீர் ஏறவில்லை என்ற புகார் முடிவுக்கு
வரும்.
2035ம் ஆண்டு மக்கள் தொகை பெருக்கத்தை கணக்கில் கொண்டு இந்த திட்டம்
வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போதுள்ள 1 கோடி மக்களுடன், புதிதாக இணைக்கப்பட்ட
புறநகர் பகுதிகளுக்கும் பலன். இதன் மூலம் குடிநீர் வீணாவதை தடுக்கலாம்.
இப்போதுள்ள பழைய குழாய்களில் 20% தண்ணீர் கசிவால் வீணாகிறது. புதிய
ரிங் மெயின் மூலம் கசிவு 5% ஆக குறையும். இந்த திட்டத்திற்கு விஜய் நாளை காலை 10 மணிக்கு
புழல் நீர்த்தேக்கத்தில் அடிக்கல் நாட்டுகிறார். அடுத்த 24 மாதங்களில் பணிகள் முடிக்கப்படும்
என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை மக்களுக்கு விஜய் ஸ்வீட் கொடுக்கிறார்.

