Share via:
ஆந்திராவுக்கு இப்போது தண்ணீர் பற்றாக்குறை இருந்தாலும் தமிழகத்திற்கு
தேவையான தண்ணீரை வழங்குவோம் என்று முதல்வர் விஜய்யிடம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு
நாயுடு உறுதியளித்திருப்பது மெகா சக்சஸ் நடவடிக்கையாக பாராட்டப்படுகிறது.
நேற்றைய தினம், கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டம் மற்றும் சென்னை
மாநகருக்குக் கூடுதலாக கிருஷ்ணா நதிநீர் விடுவிப்பது தொடர்பாகக் கலந்தாலோசிக்க விஜயவாடாவிலுள்ள
ஆந்திர முதலமைச்சர் என்.சந்திரபாபு நாயுடு இல்லத்திற்குச் சென்றார் தமிழக முதல்வர் விஜய்.
அதன்பிறகு கனகதுர்கா கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு இதையடுத்து
ஆந்திர மாநிலத்தின் விஜயவாடா நகரில் நடைபெற்ற உத்சவ் -2.0 நிகழ்ச்சியில் பெருந்திரளாக
கூடிய பொதுமக்களிடையே விஜய் உரையாற்றினார்., இந்த விழாவில் இரண்டு முதல்வர்களும் ஒன்றாகப்
பங்கேற்றது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது
இந்த சந்திப்பில் தமிழகத்தின் குடிநீர் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி
வைக்கும் வகையில் இரண்டு நல்ல விஷயங்கள் அரங்கேறியுள்ளன. தற்போது சென்னையில் 5 ஏரிகளில்
வெறும் 35% தண்ணீர் மட்டுமே இருக்கும் நிலையில், முதல்வர் ஜோசப் விஜய் சந்திரபாபு நாயுடுவிடம்
இரண்டு கோரிக்கை வைத்திருக்கிறார். அதன்படி,
சென்னைக்கு கூடுதல் கிருஷ்ணா நதிநீரை உடனே திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அதேபோல், தென்னிந்தியாவையே காப்பாற்றும் கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை தேசிய முக்கியத்துவம்
வாய்ந்த திட்டமாக பிரதமரிடம் சேர்ந்து வலியுறுத்துவோம் என்று கேட்டுக்கொண்டார்.
சென்னைக்கு தண்ணீர் திறந்துவிட ஆந்திர முதல்வர் உறுதியளித்திருப்பது
தமிழகத்திற்கு கிடைத்திருக்கும் நல்ல செய்தி. விஜய் சாதனை புரிந்திருக்கிறார்.

