Share via:
தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ அமைச்சரவை பக்கத்தில், முதலமைச்சர்
மற்றும் அமைச்சர்களின் துறைகள் அடங்கிய பட்டியல் புதுப்பிக்கப்பட்டது. அதில் அமைச்சர்களின்
பிரத்யேக மின்னஞ்சல் முகவரிகளுடன் அவர்களின் 10 இலக்க மொபைல் எண்களும் பொதுமக்கள் பார்வைக்காகத்
திறந்தவெளியில் பதிவேற்றம் செய்யப்பட்டன.
உடனடியாக இந்த விவகாரம் பெரும் வரவேற்பு பெற்றது. பொதுமக்கள் தங்கள்
தொகுதி பிரதிநிதிகளையும், அமைச்சர்களையும் நேரடியாகத் தொடர்புகொள்ளலாம் என்று விஜய்யை
பாராட்டித்தள்ளினார்கள். ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான அழைப்புகள் குவிந்ததால் அமைச்சர்களின்
போன்கள் முற்றிலும் முடங்கும் நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதனால் சில மணி நேரங்களிலேயே, அமைச்சர்களின் மொபைல் எண்கள் அனைத்தும் அந்தப் பக்கத்திலிருந்து
அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன.
எண்கள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து விமர்சனங்களும் எழத் தொடங்கியுள்ளன.
வெளிப்படைத்தன்மை என்பது தற்காலிகமானதாக இருக்கக்கூடாது என்றும், நாங்கள் ஏற்கனவே இந்த
எண்களைப் பேக்கப் எடுத்து பத்திரப்படுத்திவிட்டோம் என்றும் சமூக ஊடகச் செயல்பாட்டாளர்கள்
பதிவிட்டு வருகின்றனர். மேலும், இது வெறும் தற்காலிக தொழில்நுட்பப் பராமரிப்பா? அல்லது
அரசு தன் முடிவை மறுபரிசீலனை செய்கிறதா என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகின்றன.
பொதுமக்களின் அழைப்புகளைத் துண்டித்து விடாமல், அவற்றுக்கு உரிய
முறையில் பதிலளிப்பதற்கான ‘கால் சென்டர்’ போன்ற பாதுகாப்பு வழிமுறைகளுடன் இந்த மொபைல்
எண்கள் விரைவில் மீண்டும் அதிகாரப்பூர்வமாகப் பதிவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாற்றம் என்று சொன்னது எல்லாமே ஏமாற்றம்தானா விஜய்..?