News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

நேற்றைய தினம் ராகுல்காந்தியுடன் டீ குடித்த விஜய் இன்று பாரதப்பிரதமர் நரேந்திரமோடியுடன் பயணத்திருக்கிறார். விமான நிலையத்தில் கருப்புச்சட்டையுடன் சென்று வரவேற்பு கொடுத்தது சலசலப்பை உருவாக்கியிருக்கிறது.

சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-II-ன் வழித்தடம் 4-ன் முதற்பகுதியான பூவிருந்தவல்லி புறவழிச்சாலை மெட்ரோ இரயில் நிலையம் முதல் வடபழனி மெட்ரோ இரயில் நிலையம் வரையிலான உயர்மட்ட வழித்தடத்தில் மெட்ரோ இரயில் சேவையை தொடங்கி வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று தமிழ்நாட்டிற்கு வருகை தந்த நரேந்திர மோடியை விஜய் விமான நிலையத்துக்குச் சென்று வரவேற்பு கொடுத்தார்.

பிரதமருக்கு முதலமைச்சர் .ஜோசப் விஜய் பொன்னாடை அணிவித்து, மலர்க்கொத்து வழங்கி வரவேற்றார்.

இதையடுத்துமெட்ரோ சேவை தொடக்க விழாவில் பங்கேற்றார். 4,900 கோடியில் கட்டப்பட்ட பூவிருந்தவல்லி – வடபழனி இடையிலான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி, முதல்வர் விஜய் ஆகிய இருவரும் ஒன்றாக கைபிடித்து பச்சைக் கொடி காட்டி பயணத்தைத் தொங்கி வைத்தனர்.

இதையடுத்து இருவரும் ஒன்றாகச் சேர்ந்து மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டனர். இதையடுத்து ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று, பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்கும் நிகழ்விலும் கலந்துகொள்கிறார்.

பிரதமர் சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள மூளை ஆராய்ச்சி மையத்தை திறந்து வைக்கிறார்.

அதோடு 3,700 கோடி ரூபாய் மதிப்பிலான முக்கிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். மேலும் ரூ.750 கோடி மதிப்பில் ரயில்வே உள்கட்டமைப்புத் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். தமிழகத்தில் கடல்சார் உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், சரக்கு கையாளும் திறனை அதிகரிக்கவும் சென்னை துறைமுகத்தில் நான்கு உள்கட்டமைப்புத் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

பிரதமர், சென்னையில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மணலி சுத்திகரிப்பு நிலையத்தில் குரூப் 3,4 லூப் ஆயில் பேஸ் ஸ்டாக்ஸ் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். ஐஐடி நிகழ்வுகளை முடித்துக் கொண்டு, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா பள்ளியின் பொன்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

நிறைய திட்டங்கள் வருகிறது என்றால் தமிழகத்துக்கு மகிழ்ச்சி.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link