News

விஜய்க்கு உதயநிதி, எடப்பாடி ஆதரவு. மேகதாதுக்கு 5வது தீர்மானம்

Follow Us

விஜய் ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழ்நாடு முழுவதும் பல மணி நேரம் மின்வெட்டு தொடங்கியது. பியூஸ் கேரியர் திருடப்படுவதாக காரணம் சொல்லப்பட்டது அவர்களுக்கே சிக்கலாக மாறியது. எனவே, அவசரம் அவசரமாக மின்சாரத் துறையில் இன்று வெள்ளை அறிக்கையை அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்டார்.

வெள்ளை அறிக்கையின்பை, மின்சார துறையில் தற்போது ரூ.2,47,130 கோடி கடன் உள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 87,399 கோடி கடன் வாங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டிற்கு அதிகபட்சமாக 21,300 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் நிலையில், தமிழ்நாடு மின்வாரியம் மூலமாக 3495 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.

குறுகிய கால ஒப்பந்தம் மூலம் மின்சாரம் யூனிட்டிற்கு 6.75ரூபாய் கொடுத்து வாங்குகிறோம், மத்திய தொகுப்பில் இருந்து 13,566 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாடு வாங்குகிறது. மின் துறைக்கு 1,40,635 ஊழியர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால்,  74,714 பேர் மட்டுமே பணியில் இருக்கின்றனர். 65,921 காலிப்பணியிடங்கள் இருக்கிறது. இன்னும் 5 ஆண்டுகளில் 16,000 பேர் ஓய்வை எட்டவிருக்கின்றனர்.

பணிநியமனத்தில் 25 ஆண்டுகள் பின் சென்றிருக்கிறது தமிழகம். இந்தத்துறை வளர்ச்சி அடையாமல் போனதற்கு காரணம், கடந்த 25 ஆண்டுகளில் இந்தத் துறை வளர்ந்து வந்த பாதைதான். தேவை அதிகரித்தும் கட்டமைப்பு உருவாக்கப்படவில்லை. ஊழியர்களின் உயர்வை இரண்டு மடங்கு உயர்த்திருக்க வேண்டும். ஒருத்தர் 10 பேரின் வேலையை செய்ய வேண்டியுள்ளது.

தற்போது மின் ஊழியர்களின் தேவை 1,40, 635. இந்த ஆண்டுக்குள் 20, 449 பேரை பணிக்கு அமர்த்த முதல்வர் ஒப்புதல் தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் தற்போது 4, 47,603 டிரான்ஸ்பாமர்கள் உள்ளன. 1,910 துணை மின் நிலையங்கள் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் 122 மட்டுமே நிறுவப்பட்டுள்ளது. தற்போது 468 துணை மின் நிலையங்களை உருவாக்க இருக்கிறோம். 9 ஆயிரம் கோடியில் 238 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்.

உப்பூர் மின் நிலையம் இன்னும் திறக்கப்படவில்லை. ஆட்சிகள் மாறி மாறி வந்ததால் பாதியில் உள்ள திட்டங்களை முடிக்க 8 கோடி ரூபாய் தேவை. நிலுவையில் உள்ள திட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படும். 9 டெண்டர்களில் முறைக்கேடு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடந்தப்படும்.

புதிய மின்கட்டமைப்பை மேம்படுத்த திட்டங்கள் கொண்டு வரப்படும். 215 கோடியை மிச்சப்படுத்தும் திட்டம் அறிமுகம். தற்காலிக பணியாளர் எண்ணிகையை கணக்கெடுக்கிறோம். மின்துறை செயல்பாடுகள் இனி வெளிப்படையாக இருக்கும். ஒப்பந்த தொழிலாளர் பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

திமுக ஆட்சியில் வேலை பெற கடன் கொடுத்தோர் புகார் அளிக்கலாம். இனி கட்சி நிதி இல்லாமல் பணிநியமினம் செய்யப்படும்.

கொள்முதல் செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தியிருக்கின்றனர். அதனால் வளர்ச்சி இல்லை. மின் கட்டண உயர்வால் திமுக ஆட்சியில் சிறு, குறு நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு முன் கட்டணம் உயர்வு இல்லை. இந்தத்துறையை மேம்படுத்த திட்டமிட்டு வருகிறோம். ஒரு சில மாதங்களில், ஆண்டுகளில் துறையை நிச்சயம் மேம்படுத்திவிடுவோம்.

தலைவர் விஜய் ஆட்சிக்கு வரவில்லை என்றால் இந்தத்துறை தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டிருக்கும். பிரச்னைகள் விரைவில் சரிசெய்யப்படும். இந்த ஆண்டு மின் கட்டணத்தை உயர்த்தப்போவதில்லை. மின்துறையில் கடந்த 5 ஆண்டுகளில் விஞ்ஞான முறையில் ஊழல் நடந்திருக்கிறது” என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.

இதற்கு திமுகவினர், ‘’மின்சார வாரிய வெள்ளை அறிக்கை திமுகவின் நிர்வாக திறனுக்கு மற்றும் ஒரு சான்று. அதிமுக ஆட்சி காலமான 2011-16 இல் 56,361 கோடி 2016-21 இல் 58,534 கோடி நஷ்டம் ஆனால் திமுக ஆட்சி காலமான 2021-26 இல் 34,447 கோடி தான் நஷ்டம்.

அதாவது வழக்கமான ஐந்தாண்டு கால அளவில் பார்த்தால் 24,087 கோடி லாபம் கொண்டு வந்து இருக்கிறது திமுக அரசு மத்திய அரசின் நிதி நெருக்கடி, உதய் திட்டத்தில் அதிமுக கையெழுத்து போட்டதால் ஏற்பட்ட கூடுதல் செலவு, இதையெல்லாம் தாண்டி 24,087 கோடி அதிகம் ஈட்டி இருக்கிறது என்பது தான் சிறந்த நிர்வாகத்துக்கான சாட்சி’’ என்கிறார்கள்.

இந்த நிலையில் 500 யூனிட் இலவச மின்சாரம் எப்போது என்று விவசாயிகள் கேள்வி எழுப்புகிறார்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link