Share via:
இயக்குனர் கெளதமன் வீட்டுக் கல்யாணத்தில் கலந்துகொண்ட முன்னாள்
முதல்வர் மு.க.ஸ்டாலின், எல்லா காலத்திலும் எதிர்த்து நிற்கும் சீமானுக்கு உரிய மரியாதை
கொடுத்துவிட்டு திடீர் விஜய் பக்தராக மாறியிருக்கும் வைகோவை கண்டுகொள்ளாமல் டீல் செய்தது
திமுகவினரை குஷிப்படுத்தியிருக்கிறது.
மேலும் இன்று திருவாரூர் கல்யாணத்தில் விஜய்க்குப் பதிலடி கொடுத்தார்.
திருவாரூர் – காட்டூரில் அமைந்துள்ள கலைஞர் கோட்டத்தில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர்
மதிவாணன் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய மு.க.ஸ்டாலின், ‘’நேற்று முன்தினம்
கூட நீங்கள் எல்லாம் டி.வி.யில் பார்த்திருப்பீர்கள். ஒரு காட்சி நடந்தது. அதைப்பற்றி
எல்லாம் நம்முடைய முத்தரசன் அவர்களும் குறிப்பிட்டுச் சொன்னார். மற்றவர்களும் எடுத்துச்
சொல்லியிருக்கிறார்கள். நாட்டில் இன்றைக்கு எத்தனையோ பிரச்சினைகள் இருந்து கொண்டிருக்கிறது.
ஒரு பக்கம், மின்வெட்டு பிரச்சினை; இன்னொரு பக்கம், டெல்டா மாவட்டத்தில் விவசாயிகளுக்குக்
குறித்த நேரத்தில் தண்ணீர் திறந்து விட முடியவில்லை என்ற சூழ்நிலை. நீங்கள் ஒன்றை எண்ணிப்
பார்க்க வேண்டும்…
2021-க்கு பிறகு 5 ஆண்டுகள் நாம் ஆட்சி பொறுப்பில் இருந்தபோது
ஒவ்வொரு ஆண்டும் நாம் தவறாமல் மேட்டூர் அணையைக் குறித்த நேரத்தில், குறித்த நேரத்திற்கு
முன்பேகூட திறந்து வைத்திருக்கிறோம். அதுதான் நம்முடைய ஆட்சி! இதையெல்லாம் எடுத்துச்
சொல்லி எதிர்க்கட்சியின் தலைவராக இருக்கும் நம்முடைய உதயநிதி அவர்கள் விளக்கமாக விரிவாக
சட்டமன்றத்தில் பேசி, இருக்கும் சூழ்நிலைகளை எல்லாம் எடுத்துச் சொல்லி, அதன் மூலமாக
முதலமைச்சர் அவர்கள் பதில் சொல்ல வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.
ஆனால் சட்டமன்றத்தில் முதலமைச்சராக இருக்கக்கூடியவர் என்ன பதில்
சொன்னார்? “எங்கே காணோம்?” “உங்க அப்பாவைக் காணோம்” என்று சொல்லி இருக்கிறார். அப்பாவை
அங்கே தேடாதீர்கள். மக்கள் மனதில் பதிந்திருக்கிறான். அது போதும். நீங்கள் தேடும் இடத்தில்
நான் இருக்க மாட்டேன். மக்கள் தேடும் இடத்தில் நிச்சயமாக நான் முதல் ஆளாக நிற்பேன்.
நான் சட்டமன்றத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இன்றைக்கு நான் மக்கள் மன்றத்தில்
இருக்கிறேன் என்பதை மாத்திரம் இந்த நேரத்தில் எடுத்துச் சொல்கிறேன்.
இன்னும் கூட சொல்கிறேன், இன்றைக்கு இருக்கும் முதலமைச்சர் தேடிப்
பார்க்க வேண்டும் என்றால், நான் அவரைக் கேட்டுக் கொள்கிறேன்… கோட்டையில்தான் கோப்புகள்
எல்லாம் இருக்கின்றன. எனவே, அந்தக் கோப்புகளை எல்லாம் எடுத்துப் பாருங்கள். அதில் நான்
கையெழுத்து போட்டிருப்பேன், ‘மு.க. ஸ்டாலின், மு.க. ஸ்டாலின்’ என்று. அதனால் நீங்கள்
தேடிப் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. அந்தக் கையெழுத்தைப் பாருங்கள். அதில் தெரியும்
உங்களுக்கு.
எனவே நீங்கள் எங்கும் தேடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை.
கோட்டையிலேயே இருக்கிறேன். நான்தான் ஆட்சியில் இருக்கிறேன். இன்னும் சொல்கிறேன்,
நம்முடைய மதிப்பிற்குரிய துணைப் பொதுச் செயலாளர் சகோதரர் ஆ. இராசா
அவர்கள் பேசுகிறபோது, கூட்டணி பற்றி எல்லாம் எடுத்துச் சொன்னார்கள். எப்போதுமே கலைஞர்
அவர்கள் கூட்டணி அமைத்தால், அந்தக் கூட்டணியைப் பாதுகாப்பாக வைத்திருப்பார். அவர்களாகத்தான்
செல்வார்களே தவிர, கலைஞர் இதுவரை விட்டது கிடையாது. அதேபோன்றுதான் நானும் அவர் வழி
நின்று, எந்தக் கூட்டணியாக இருந்தாலும் விடமாட்டேன். ஆனால் அவர்களாகச் சென்றால், நான்
ஒன்றும் சொல்ல முடியாது. அதுதான் என்னுடைய கடமை. ஆனால் இன்றைக்கு இருக்கும் மக்கள்
எல்லாம், கூட்டணியே தேவை இல்லை என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக
அதையும் நாங்கள் விரைவில் பரிசீலிப்போம், பரிசீலிப்போம், பரிசீலிப்போம்…’’ என்று கூறியிருக்கிறார்.
இயக்குனர் கெளதமன் இல்லத்தில் நடந்தது குறித்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன்,
‘’கெளதமன் இல்ல விழாவில் பங்கேற்க சென்ற அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களை அங்கிருந்த வைகோ,
சீமான் இருவரும் சந்திக்கும் காட்சியை தொலைக்காட்சியில் பார்த்தேன்.
ஸ்டாலின் வைகோவை பார்த்து “எப்படி இருக்கீங்க” என இயல்பாக
கேட்கிறார் , வைகோ ஒரு புழுப் போல நெளிகிறார் பார்க்கவே பரிதாபமாக இருந்தது . 27ம்
தேதிக்கு பிறகு இன்னும் மோசமான நிலைக்கு தள்ளப்படுவார் என நினைக்கிறேன் , மதிமுக பாசானத்தில்
புழுத்த புழு என அந்த கட்சியில் ஒருவர் அடிக்கடி சொல்வார் இப்போது வைகோவே புழுப்போல
மாறிக்கிடக்கிறார்’’ என்று கூறியிருக்கிறார்.
பதவி படுத்தும் பாடு.
