Share via:
விஜய் அரசியலுக்கு நுழைவதை சூசகமாகச்சொல்லி, துப்பாக்கியை சிவகார்த்திகேயன்
கையில் கொடுத்துவிட்டு வந்தார். அந்த விஜய்க்கு எதிராகவே சிவகார்த்திகேயன் கட்சி தொடங்க
இருப்பது போன்று பில்டப் கொடுத்திருப்பது தவெகவினரை கடும் கோபத்தில் தள்ளியிருக்கிறது.
அதனால் கடுமையான விமர்சனம் வைக்கிறார்கள்.
ரசிகர் மன்றத்தின் மூலம் நற்பணிகள் செய்வதும், கட்சி தொடங்குவதும்
யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், விஜய்யை காப்பியடிக்க வேண்டாம் என்பதுதான் தவெகவினர்
கோரிக்கை.
விஜய் ரசிகர்களுக்கு ஏற்ப சினிமா விமர்சகர் ஒருவர், ‘’என்னை வாழவைக்கும்
மக்களுக்கு ஏதாவது செய்யணும் என்று சொல்கிறாரே, அவருக்கு ஆளும் மத்திய மற்றும் தமிழக
அரசின் மக்கள் விரோத செயல்களை கேள்வி கேட்க.. முதுகெலும்பு இருக்கா? ரசிகர் மன்றம்
கூட்டி.. சாப்பாடு போடறது மட்டும்தான் நல்லது செய்றதா? அவங்களை விட்டுடுங்கய்யா. இனியாவது
உருப்படட்டும்.
உங்க வீட்டு பிள்ளைங்க இந்த மாதிரி சினிமாக்காரனோட ரசிகர் மன்றத்துல
சேந்து.. அடிக்கடி இப்படி உங்க மீட்டிங்ல நேரத்தை வீணடிக்க விடுவீங்களா? மத்தவங்க வீட்டு
பசங்களை ஆயிரக்கணக்குல கூட்டி.. மக்களுக்கு என்ன செஞ்சி கிழிப்பீங்க? ஆளும் மத்திய
மற்றும் மாநில அரசுக்கு எதிரா ஒரு கேள்வி அல்லது ஒரு போராட்டம் செய்ய துப்பில்லாத நீங்க
ஏன் எம்.ஜி.ஆர். விஜயகாந்த் பத்தி பேசறீங்க? சுள்ளான் மற்றும் திடீர் தளபதிகள் பின்னால்
சுற்றும் இளைஞர்களே.. எல்லாம் விஜய், அஜித்தோடு போதும்.
இந்த புதிய டிக்கெட்டுகளால் உங்கள் எதிர்காலத்திற்கு எந்த பயனுமில்லை.
உங்களால்தான் அவர்களின் சினிமா வியாபாரம் மற்றும் அரசியல் எதிர்காலத்திற்கு பயன். ஆகவே
உருப்படும் வழியை பாருங்கள். மீண்டும் ஒரு தலைமுறைக்கு விசிலடித்து, கட் அவுட் அபிஷேகம்
செய்து, ப்ளாக் டிக்கெட் வாங்கி நாசமாய் போகாதீர்கள்’’ என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
விஜய்யைத் தொட்டால் அம்புட்டுத்தான் என்று சிவகார்த்திகேயனுக்கு
எச்சரிக்கை மழை பொழிகிறார்கள்.

