News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

விஜய்க்கு எதிராக தினமும் திருமாவளவன் ஏடாகூடமாகப் பேசிவரும் தகவல்களால் தவெகவில் கடும் எரிச்சல் உருவாகியுள்ளது. நேற்றைய தினம், ‘’தமிழ்நாட்டில் மும்முனை போட்டி உருவாக்க எஸ்.ஐ.ஆர். பயன்பட்டுள்ளது; இல்லையென்றால் இருமுனைப் போட்டியாகதான் இருந்திருக்கும். அதனால்தான் தேர்தல் முடிவு இப்படி வந்திருக்கிறது’’ என்று விஜய் ஆட்சியை குற்றம் சாட்டியிருந்தார்.

முன்னரே, கரூர் வழக்கில் விஜய்யை கைது செய்திருக்கவேண்டும் என்று பேசியிருந்தார். இந்நிலையில், ‘’தமிழக வெற்றி கழக ஆட்சியை திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் விரும்பவில்லை. தொடர்ச்சியாக ஆளும் அரசுக்கு எதிராக ஆதரவு என்ற பெயரில் ஆட்சியை கலைக்க ரகசிய திட்டம் நடைபெற்று வருகிறது’’ என்று உளவுத்துறை எச்சரிக்கை செய்திருப்பதாக கூறப்படுகிறது.

அதனால், விஜய் தனக்கு நெருக்கமான வட்டாரத்துடன் ஆலோசித்து வருவதாகவும், தேர்தல் முடிவுக்குப் பிறகு அதிரடி அரசியல் நகர்வுகள் இருக்கும் என்கிறார்கள்.

அதேநேரம், விசிக தொண்டர்கள் குறித்து திருமா பேசியது, அவர்களுடைய கட்சிக்குள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவருடைய தொண்டர்களைப் பற்றி, ‘’காலையில டிபன் சாப்பிடுவதற்காக ஏதாவது ஒரு ஹோட்டலுக்குள்ள போனா போதும்… நான் இரண்டு தோசை ஆர்டர் பண்ணுவேன். தோசை வருவதற்குள்ள எங்கிருந்துதான் வருகிறார்கள் என்று தெரியவில்லை… திப்பி திப்புன்னு வந்து 50, 100 பேர் என்னை சுற்றி உட்கார்ந்து விடுகிறார்கள். நான் இரண்டு தோசைதான் சாப்பிடுறேன்… ஆனால் பில் மட்டும் 12 ஆயிரம் ரூபாய்.

மத்தியானம் யாருக்கும் தெரியாமல், “இன்னைக்கு நிம்மதியா சாப்பிடலாம்” என்று எங்கேயாவது மறைவிடத்தில் இருக்கும் ஒரு சின்ன ஹோட்டருக்குள்ள போனா, அங்கேயும் இதே கதைதான். நான் சாப்பிட ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே நூறு பேர் உள்ளே நுழைந்து விடுகிறார்கள். எங்கிருந்துதான் வருகிறார்கள் என்று தெரியவில்லை மட்டன், சிக்கன், வறுவல், பிரியாணி என்று ஒரு திருவிழாவையே நடத்தி முடிச்சுட்டு பில் மட்டும் 30 ஆயிரம், 40 ஆயிரம் என்று வந்து நிற்கிறது.

ஏதாவது ஒரு மேடையில் பேசுவதற்காக போனால் அதுவும் நிம்மதியாக இல்லை. நான் மேடையில் ஏறுவதற்குள் தொண்டர்கள் மேடையிலேயே ஏறி நின்று விடுகிறார்கள். ஒருவர் என்னை தள்ளுகிறார், இன்னொருவர் என்னை அணைக்கிறார், இன்னொருவர் செல்பி எடுக்கிறார். நான் பேச வந்தேனா, இல்லை தொண்டர்களுடன் மல்யுத்த போட்டியில் கலந்துகொள்ள வந்தேனா என்று எனக்கே சந்தேகம் வருகிறது’’

ஒரு லேடிஸ் காலேஜுக்கு பேசப் போனேன். “அண்ணன் லேடிஸ் காலேஜுக்கு போறாரு, வாங்கடா!” என்று சொல்லி ஒரு கும்பல் கிளம்பி வந்து, கேட்டை தாண்டி, குதித்து உள்ளே வந்து, கல்லூரியே பரபரப்பாகி விட்டது. போலீசார் வெளியே விரட்டினாலும் போகாமல் உள்ளே இருந்து அடம்பிடிக்கிறார்கள் சிலர் கக்கூஸில் போய் மறைந்து கொண்டார்கள். கடைசியில் போலீஸ் வந்து அடித்து விரட்டி வெளியே அனுப்ப வேண்டிய நிலை’’ என்று கூறியிருக்கிறார்.

திருமா மனசுல என்ன இருக்குன்னு தெரியவில்லை என்று அவரது கட்சியினரே புலம்புகிறார்கள்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link