Share via:
நேற்றைய தினம் செவிலியர்கள் போராட்டமும் அதை முடிவுக்கு கொண்டுவர
காவல் துறை மேற்கொண்ட நடவடிக்கையும் தவெக அரசு மீது பலரும் விமர்சனம் செய்யும் நிலைக்கு
ஆளாகியுள்ளது. எனவே, அவர்களது கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு விஜய் தீவிர ஆலோசனை செய்துவருகிறார்.
தற்போது தமிழ்நாடு முழுவதும் ஏறக்குறைய 7,500 செவிலியர்கள் தற்காலிகப்
பணியாளர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர். தற்காலிகப்பணியாளர்களுக்கும், நிரந்தரப் பணியாளர்களுக்கும்
ஒரே மாதிரி வேலை என்றாலும் ஊதியத்தில் பெரும் வித்தியாசம் இருக்கிறது.
தற்காலிகப்பணி செய்யும் செவிலியர் ஊதியம் 18,000 ரூபாயாகவும் நிரந்தரப்பணி
செய்யும் செவிலியர் ஊதியம் 54,000 ரூபாயாகவும்
உள்ளது. இந்த செவிலியர்களுக்குச் சம ஊதியம்
கொடுக்கச் சொல்லி உயர் நீதிமன்றமும் வலியுறுத்தியிருக்கிறது.
ட்சிக்கு வந்தால் அனைத்து துறைகளிலும் 5 ஆண்டுகளுக்கும் மேலாக
பணியாற்றும் தற்காலிக பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்குவோம் என்று தவெக வாக்குறுதி
அளித்திருந்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி செவிலியர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
செவிலியர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக சுகாதாரத்துறை செயலாளர்
உறுதியளித்ததைத் தொடர்ந்து நவம்பர் 3ம் தேதி வரை போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளனர்.
அதற்குள் இவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவார் விஜய் என்று சொல்லப்படுகிறது.
அப்படியே நடக்கட்டும்.

