News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

இன்று காலை முதல் தாராபுரம் ,மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளிலும் ஓட்டு போடுவதற்கு மக்கள் ஆர்வம் காட்டிவருகிறார்கள். விஜய் ஆட்சியில் நடக்கும் முதல் இடைத்தேர்தல் என்பதால் இந்த தேர்தலில் விஜய் அதிக ஆர்வம் காட்டினார். இதில் வெற்றி உறுதி என்பதில் விஜய்க்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. எனவே, அடுத்த 7 தொகுதி இடைத்தேர்தலுக்கு இப்போதே தயார் என்கிறார்கள்.

கடந்த 2026 பொது தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் 93% , தாராபுரம் 90% வாக்குகள் பதிவாகியிருந்தது. இன்று காலை விறுவிறுப்பைப் பார்க்கையில், இரண்டு தொகுதிகளிலும் 95% வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிக வாக்குகள் பதிவாகும்போது, இரண்டு தொகுதிகளிலுமே தவெக வேட்பாளர்கள் மிகப் பெரியளவில் வெற்றி பெறுவதற்கே வாய்ப்பு அதிகம். அதனால் இப்போதே அடுத்த ஏழு தொகுதிகளுக்கான ஆலோசனை தவெகவில் நடக்கிறது.

இன்று நடைபெறும் மதுராந்தகம், தாராபுரம் தவிர்த்து பெருந்துறை, கரூர், திருச்சி கிழக்கு, விராலிமலை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 இடங்களிலும் இடைத்தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை எல்லாவற்றிலும் விஜய் வெற்றி பெற்றாலும் தவெகௌக்கு மொத்த எண்ணிக்கை 114 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருக்கும். அப்போதும் மெஜாரிட்டிக்கு 3 பேர் தேவை.

அதனால் அடுத்த 5 இடைத்தேர்தலிலும்  அதிமுக-விலிருந்து விலகி வந்த எம்.எல்.ஏ-க்களுக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இதன் மூலம் மேலும் 10 அதிமுகவினரை ராஜினாமா செய்ய வைப்பதற்கு வாய்ப்பு உருவாகும்.  

அதன்பிறகு நிம்மதியாக ஆட்சியை நடத்தலாம், நிறைய நிறைய நன்மைகள் செய்யலாம் என்கிறார்கள். அரசியலில் அதிரடி நடத்துகிறார் விஜய். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link