News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

தமிழகத்தின் மிக முக்கியப் பதவிகளான தலைமைச் செயலாளர் மற்றும் மாநில காவல் துறைத் தலைவர் ஆகியோரை நியமிப்பதில், இதுவரை பின்பற்றப்பட்டு வந்த தமிழக ஆளுநரின் முன்அனுமதி பெறும் நடைமுறையை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த இரு உயர்பதவிகளுக்கான நியமன உத்தரவுகளை ஆளுநரின் ஒப்புதல் அல்லது அனுமதி இன்றியே மாநில அரசு நேரடியாகப் பிறப்பிக்க முடியும். மனித வள மேலாண்மைத் துறை சார்பில் கடந்த ஜூலை 29ம் தேதியிட்ட புதிய நிலையான வழிகாட்டுதல் உத்தரவு மூலம் இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்துள்ளது.

தலைமைச் செயலாளர் எம். சாய்குமார் மூலம் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவு, 1978ம் ஆண்டின் தமிழ்நாடு அரசுப் பணி விதிகளின்படி அரசு ஊழியர்கள் நியமன செய்யப்படும் விதியை முற்றிலும் மாற்றியமைத்துள்ளது. அதோடு, 2022 முதல் 2025 வரை மற்றும் கடந்த ஜனவரி மாதம் வரை பிறப்பிக்கப்பட்ட அனைத்து பழைய நிலையான உத்தரவுகளையும் இந்த புதிய உத்தரவு ரத்து செய்துள்ளது.

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீதான அதிகாரம் இந்த விதி மாற்றத்தின் மூலம், மாநில நிர்வாகத்தின் ஒவ்வொரு முக்கிய முடிவிலும் முதல்வரின் ஒப்புதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசுச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள், அகில இந்திய சேவை அதிகாரிகள், கூடுதல் செயலாளர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோரின் நியமனங்கள், மாறுதல்கள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான அனைத்துக் கோப்புகளும் இனி அமைச்சர்கள் மட்டத்திலேயே முடிவெடுக்கப்படக் கூடாது என்றும், அவை அனைத்தும் நேரடியாக முதல்வரின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும் என்றும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் (IFS) அதிகாரிகளுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கைகள், விசாரணைத் தொடக்கம், விளக்கம் கேட்கும் நோட்டீஸ் அனுப்புதல் முதல் இறுதி உத்தரவு பிறப்பிப்பது வரை அனைத்து நிலைகளிலும் முதல்வரின் நேரடி ஒப்புதல் பெறப்பட வேண்டும். தமிழக நிர்வாக அமைப்பில் முதல்வரின் அதிகாரத்தை வலுப்படுத்தும் இந்த நடவடிக்கை, மாநில சுயாட்சி மற்றும் நிர்வாகச் சுதந்திரத்தை உறுதி செய்யும் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

சொல் அல்லது செயல்தான் விஜய் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார் விஜய். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link