Share via:
விவசாயப் பெருமக்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் டிராக்டர் ஓட்டி
அசத்திய விஜய், நேற்றைய தினம் மாட்டுவண்டி ஓட்டினார். அதொடு, பெண்களை இழிவாகவும்
அவதூறாகவும் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களித்து ஆதரவளிக்கக் கூடாது என்று தாராபுரம்
தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் இருந்து தனி விமானத்தில் கோவை வந்த முதல்வர், அங்கிருந்து
ஹெலிகாப்டரில் தாராபுரம் வந்தார். அங்கிருந்த பிரச்சார வேனில் ஏறி ரோடு ஷோவை தொடங்கிய
விஜய், சாலையில் இருபுறமும் திரண்டிருந்த மக்களை பார்த்து கையசைத்தும், வணக்கம்
தெரிவித்தபடியும் சென்றார்.
அதன்பிறகு தாராபுரம் நகரில் திரண்டிருந்த மக்களிடையே விஜய் பேசினார்.
அப்போது அவர், ‘’திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களிப்பது என்பது,
பெண்களை அவதூறாகப் பேசுபவர்களை ஆதரிப்பதற்குச் சமம். நமது வீட்டு தாய்மார்களையும்,
சகோதரிகளையும் தரக்குறைவாக பேசுபவர்களை எந்தக் காலத்திலும் மன்னிக்கக் கூடாது.
தேர்தல் ஆதாயத்துக்காக மட்டும் நான் இதை கூறவில்லை. அண்மையில்
தாராபுரத்துக்கு வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் ஆகியோர் பேசிய பேச்சுகள்
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சகோதரி சத்யபாமா குறித்து அவர்கள் பேசிய
வார்த்தைகள் காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு மிகவும் மோசமாக உள்ளன.
என்னைப் பற்றி யார் என்ன விமர்சனம் செய்தாலும் அதை பொறுத்துக்
கொள்வேன். ஆனால், நம் வீட்டுப் பெண்களையோ அல்லது நம்ம வீட்டில் உள்ள அம்மா, சகோதரிகளை
இழிவாகப் பேசினால் நிச்சயம் சும்மா இருக்க மாட்டேன். திமுகவினரின் செயல்பாடுகள்
இப்படித்தான் உள்ளன’’ என்று எச்சரிக்கை செய்தார்.
தாராபுரம் அமராவதி ஆற்று பாலம் அருகில் வந்தபோது பிரச்சார
வேனில் இருந்து இறங்கிய விஜய், விவசாயி நிறுத்தியிருந்த ரேக்ளா வண்டியில் ஏறி
அமர்ந்து சில அடி தூரம் சவாரி செய்தார். வழிநெடுகிலும் பல இடங்களில் தொண்டர்கள்
அளித்த பரிசுப் பொருள்களை உற்சாகமாக பெற்றுக்கொண்டார்.
மூலனூர் செல்லும் வழியில் அலங்கரிக்கப்பட்ட காங்கயம் காளை
மாடுகளைக் கண்டதும், வாகனத்தில் இருந்து இறங்கி சென்று காளைகளுடன் புகைப்படம்
எடுத்துக் கொண்டார். மூலனூர் பகுதியில் முருங்கை தோப்புக்குள் சென்ற முதல்வர்
விஜய், அங்கிருந்த தொழிலாளர்களிடம் கலந்துரையாடினார். பின் கொக்கி அணிந்த மூங்கில்
கம்பு மூலம் முருங்கைக் காய்களை பறித்தார்.
இதைத்தொடர்ந்து, மூலனூர் வஞ்சியம்மன் கோயிலுக்கு சென்று சாமி
கும்பிட்டார். அங்கிருந்து வெளியே வந்த விஜய், சுமார் அரை கி.மீ. தூரம் சாலையில்
நடந்து சென்று கூடியிருந்த மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
தேர்தல் பிரசாரம் முடிந்துவிட்டது. விஜய்க்கு வெற்றி..?

