Share via:
பெண்களுக்கான இலவச வெற்றிப் பயணத்தை இன்று முதல்வர் விஜய் விசிலடித்து
தொடங்கி வைத்திருக்கிறார். இந்த திட்டத்தின் மூலம், மாநகரம் நகர்ப்புறம் பகுதிகளில்
சாதாரண, எக்ஸ்பிரஸ் ,எல் எஸ் எஸ், டீலக்ஸ் பேருந்துகளிலும் புறநகர் பகுதிகளில் சாதாரண
சேவை பேருந்துகளிலும் மலைப்பகுதிகளில் சாதாரண சேவை பேருந்துகளிலும் இனி தமிழ்நாடு முழுக்க
பெண்கள் இலவசமாக பயணம் செய்யமுடியும்.
இன்று அறிவிப்பு செய்திருந்தபடி கோயம்பேட்டில், தமிழக அரசின் மகளிருக்கான
இலவச பேருந்து பயணமான மகளிர் வெற்றிப் பயண திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
சென்னையில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் பேருந்தில் பெண்களுக்கு டிக்கெட்டுகளை வழங்கினார்
முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்யிடம் டிக்கெட் வாங்க முண்டியடித்த பெண்கள், கட்டணத்திற்கு
பதில் சாக்லேட் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை கொடுத்து முதல்வர் விஜய்யிடம் டிக்கெட்டுகளை
பெற்றுக் கொண்டனர்.
இதுகுறித்து விஜய் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், ‘’பெண்களின் பயணம் என்பது வெறும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு
இடத்திற்குச் செல்வதல்ல… அது கல்வியை நோக்கிய பயணம், வேலைவாய்ப்பை நோக்கிய பயணம், சுயநிறைவை நோக்கிய பயணம், கனவுகளை நோக்கிய பயணம்! “வெற்றிப் பயணம்” திட்டம் மூலம்
பெண்களுக்கு வழங்கப்படும் கட்டணமில்லா பேருந்துப் பயண வாய்ப்பு, அவர்களின் அன்றாட பயணச் செலவைக் குறைத்து, கல்வி, வேலை, தொழில், மருத்துவம்
மற்றும் தனிப்பட்ட முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை மேலும் எளிதாக்கும். இந்த
வாய்ப்பை ஒவ்வொரு பெண்ணும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளட்டும்.
உங்கள் கல்விக்காகப் பயணம்
செய்யுங்கள்…உங்கள் வேலைக்காகப் பயணம் செய்யுங்கள்… உங்கள் தொழிலுக்காகப் பயணம்
செய்யுங்கள்…முக்கியமாக ,உங்கள்
கனவுகளுக்காகப் பயணம் செய்யுங்கள்! “வெற்றிப் பயணம்” பெண்களின் பயணமாக மட்டும்
இல்லாமல், அவர்களின் வெற்றிக்கான பயணமாக மாறட்டும்’’ என்று முதல்வர்
வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

