News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

இன்று காந்திஜெயந்தியை முன்னிட்டு தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள் வழியில் நடப்போம் என்று முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதோடு, காவலர்களுக்கு விருது வழங்கி கெளரவித்துள்ளார்.

இன்றைய விஜய் அறிக்கையில், ‘அகிம்சை என்னும் பேராயுதத்தால் உலகையே வியக்க வைத்து, இந்தியத் திருநாட்டிற்கு விடுதலையைப் பெற்றுத்தந்த மாபெரும் தலைவர், நமது தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளில் அவரது தேசப்பற்றையும், தியாக வாழ்வையும் போற்றி வணங்குகிறேன்.

எளிமை, நேர்மை, மனிதநேயம், சமத்துவம், சமூக நல்லிணக்கம் ஆகியவற்றைத் தனது வாழ்வின் நெறிகளாகக் கொண்டு, உலகம் முழுமைக்கும் அன்பையும், சகோதரத்துவத்தையும் பரப்பிய மாமனிதராகத் திகழ்ந்தவர். மகாத்மா காந்தியடிகளின் கனவுகளை நனவாக்கி, அமைதியும், நல்லிணக்கமும், சகோதரத்துவமும் தழைத்திடும் சமூகத்தை உருவாக்கி, நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாத்து, அவர் காட்டிய அறவழியில் நமது வெற்றிப் பயணத்தைத் தொடர்வோம்’’ என்று கூறியிருக்கிறார்.

அதோடு, மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை பணியாளர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது – 2026 -ஆம் ஆண்டுக்கான காந்தியடிகள் காவலர் விருது வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி,

வ.வெ. சாய்பிரணீத், இ.கா.ப., காவல் கண்காணிப்பாளர், திருவள்ளூர்

ஜெ. ராமன், காவல் ஆய்வாளர், திருச்சி

க. சண்முகம், காவல் உதவி ஆய்வாளர், விழுப்புரம்

எ. கருணாகரன், தலைமைக் காவலர்-1674, கடலூர்

பெ. செல்வம், தலைமைக் காவலர்-381, கள்ளக்குறிச்சி  

இவர்கள் அனைவருக்கும் குடியரசு தினத்தன்று விருதுகள் வழங்கப்படும். இந்த விருதுடன் ஒவ்வொருவருக்கும் 40,000 ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது, 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link