Share via:
உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் தொடர்பான ஒரு வழக்கு நேற்று
விசாரணைக்கு வந்தபோது, தமிழக முதல்வர் விஜய்யின் செயல்பாடுகளுக்கு நீதிபதிகள்
பாராட்டு தெரிவித்தது, விஜய் ரசிகர்களையும் தொண்டர்களையும் உற்சாகப்படுத்தியிருக்கிறது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் குமார், சஞ்சீவ் சச்தேவா
அமர்வில் தமிழகம் தொடர்பான குற்ற வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,
தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர் பி.கருணாகரன் ஆஜராகி, “நான் ஏற்கெனவே இந்த வழக்கில்
மனுதாரர் சார்பில் ஆஜராகி இருந்தேன். தற்போது அரசு வழக்கறிஞராகப் பொறுப்பேற்றுள்ளதால்,
இந்த வழக்கின் பொறுப்பை வேறு ஒருவருக்கு மாற்ற வேண்டும். வழக்கினை தள்ளிவைக்க
வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், “தமிழகத்தில் சில விஷயங்கள்
இன்னும் சீரடைய வேண்டியுள்ளன. எனினும், தற்போதைக்கு தமிழக முதல்வரின் செயல்பாடுகள்
குறித்து நல்ல தகவல்கள் எங்களுக்கு கிடைக்கின்றன. அந்த வகையில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்”
என்று கருத்து தெரிவித்தனர்.
நேர்மையான ஆட்சி கொடுத்துவரும் விஜய்க்கு உச்சநீதிமன்றம் கொடுத்திருக்கும்
சர்டிஃபிகேட் இது.

