News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

தாராபுரம் தொகுதியில் நிறைய கிராமங்களில் நுழைய முடியாத அளவுக்கு சத்தியபாமா கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இந்த நிலையில், நேற்றைய மேடையில் சத்தியபாமாவின் அழுகையும், விஜய்யின் பேச்சும் நிலவரத்தை மாற்றிவிட்டது என்கிறார்கள்.

இதுகுறித்துப் பேசும் தவெகவினர், ‘’ஒரு வேட்பாளரை ஊருக்குள் பிரச்சாரம் செய்ய விடாமலும் அவரைப் பற்றி சமூக வலைதளங்கில் அவதூறாகவும் அநாகரிகமாகவும் பேசுவதும் மற்றும் அவரை பெண் என்று கூட பாராமல் எதிர்க்கட்சிகள் இவ்வளவு மோசமாக நடந்து கொண்டிருக்கிறார் என்று சத்தியபாமா சிந்திய கண்ணீரால் தொகுதியில் நிறைய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.

தாராபுரம் தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளர் சத்தியபாமாவை பிரச்சாரம் செய்ய விட்டு எதிர்க்கட்சிகள் வேடிக்கை பார்த்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவரை பிரச்சாரம் செய்ய விடாமல் தடுப்பது என்பது சத்திய பாமாவின் வளர்ச்சிக்கு எதிர்க்கட்சிகளே வித்திட்டது போன்று அமைந்து விட்டது. ஒரு சமூகத்தின் வாக்குகளை மட்டும் வைத்துக் கொண்டு எந்த கட்சியும் வெற்றி பெற்று விட முடியாது. வரும் இடைத்தேர்தலில் தாராபுரம் தொகுதி மக்கள் நிச்சயம் இதனை நிரூபித்து காட்டுவார்கள்.

சத்தியபாமா சிந்திய கண்ணீர் அந்த தொகுதி பெண்கள் மத்தியில் நிச்சயம் பேசப்பட்டிருக்கும். எந்த சமூகத்தைச் சேர்ந்த பெண்களாக இருந்தாலும் அவர்களும் பெண்கள்தானே. அரசியலில் பெண்கள் ஜெயிப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. நிச்சயம் அதற்கு பின்னால் பெரிய போராட்டம் இருக்கும்.

சத்தியபாமாவை விஜய் அணைத்து ஆறுதல் சொன்னதும், திமுகவுடன் அதிமுக கூட்டணியை உடைத்துப் பேசியதும் தொகுதியில் மிகப்பெரும் மாற்றத்தை உருவாக்கியிருக்கிறது. விஜய் மேஜிக்கால் சத்தியபாமாவுக்கு வெற்றி நிச்சயம்’’ என்கிறார்கள்.

பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link