News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செம்மலை இன்று, அமைச்சர் பார்த்திபன் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார். இன்று தாராபுரம் பிரசாரத்துக்கு வரும் விஜய் மேடையில் செம்மலை ஏறுகிறார் என்கிறார்கள்.

அதிமுக களப்பணிகளில் சிறந்த செயல்வீரர் மட்டுமல்ல மக்களிடம் தனக்கென்று தனி செல்வாக்கும் கொண்டவர் அண்ணன் செம்மலை. இவர் மகனுக்கு கட்சியில் இடம் கேட்டிருக்கிறார். மகனுடன் செம்மலையும் வரவேண்டும் என்று அழைப்பு கொடுக்கப்பட்டதால், அவர் இணைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

அமைச்சர் முன்பு தவெகவில் இணைந்த செம்மலை, தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரக் பொதுக்கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் மற்றும் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அவர் முறைப்படி தவெகவில் இணைகிறார்.

இன்று தாராபுரத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் மற்றும் ரோடு ஷோ நிகழ்வில் விஜய் பங்கேற்கிறார். இந்த மேடையில்தான் செம்மலை தவெகவில் இணைகிறார்.

செம்மலையின் அரசியல் பின்னணி அதிமுகவின் மூத்த தலைவர்: செம்மலை அதிமுகவின் மிக மூத்த தலைவர்களில் ஒருவராவார். இவர் தாரமங்கலம் மற்றும் ஓமலூர் தொகுதிகளிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதிமுக ஆட்சிக்காலத்தில் நல்வாழ்வுத்துறை அமைச்சராகவும், தமிழக சட்டமன்றத்தின் தற்காலிக சபாநாயகராகவும் பதவி வகித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பே அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசல்கள் மற்றும் நிகழ்வுகள் காரணமாக கட்சியின் முக்கியப் பொறுப்புகளிலிருந்து விலகுவதாக செம்மலை அறிவித்திருந்தார். மேலும், தவெக தலைமை செம்மலையின் அரசியல் அனுபவத்தையும், எம்.ஜி.ஆர் காலத்து அதிமுக தொண்டர்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் செல்வாக்கையும் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்த விரும்புகிறது. செம்மலையின் இந்த வருகை தவெகவிற்கு கொங்கு மண்டல அரசியலில் பெரும் பலத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link