Share via:
தாராபுரத்தில் இன்று விஜய் பிரசாரம் செய்ய இருக்கும் நிலையில்,
தாறுமாறான ஏற்பாடுகள் தயாராகியுள்ளன. திராவிட கட்சிகள் இப்படி ஒரு கூட்டத்தை கூட்ட
வேண்டும் என்றால் வண்டி, சாப்பாடு நிறைய ஏற்பாடுகள் செய்யணும்.. ஆனால் பணம் கொடுக்காமல்
அலையலையாக மக்கள் வந்து சேர்கிறார்கள். ரூட் மேப் வெளியிடப்பட்ட இடங்களில் எல்லாம்
கூட்டம் குவிகிறது.
இன்று தாராபுரம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பரப்புரை திருப்பூர்
மாவட்டம், தாராபுரம் வட்டம், சித்ராவுத்தன்பாளையம் கிராமம், மாருதி நகரில் மாலை
3.00 மணி அளவில் நடைபெற உள்ளது. 5000 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள
அனுமதிக்கப்படுவார்கள்.
பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் – சிறுமியர்,
பள்ளி மாணவ – மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள்
உள்ளிட்டவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை.
நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளவர்களுக்குத் தேவையான குடிநீர்,
மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அனுமதிச் சீட்டு
இல்லாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆனாலும்,
விஜய்யைப் பார்க்க மக்கள் முட்டி மோதுகிறார்கள்.
இதற்கு முன்னாள் பாஜக தலைவர் கடும் அதிருப்தி தெரிவித்திருக்கிறார்.
அதாவது, ‘’ஒரு முதலமைச்சரின் பாதுகாப்பு முக்கியமானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
ஆனால், அந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளின் பெயரில் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் இயல்பான
பயணத்தையும், அன்றாட வாழ்க்கையையும் பாதிக்கும் வகையில், ஒரு நாள் முழுவதும் போக்குவரத்து
கட்டுப்பாடுகள் விதிப்பது கடுமையான கண்டனத்துக்குரியது. தேர்தல் பிரச்சாரத்துக்காக,
அரசு நிர்வாகத்தின் முழு இயந்திரமும் பொதுமக்களை கட்டுப்படுத்தும் வகையில் பயன்படுத்தப்படுவது
தவிர்க்கப்பட வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார்.
இது, தானாக சேரும் கூட்டம் என்பதை அண்ணாமலை புரிந்துகொள்ள வேண்டும்.

