News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

பி.டி.அரசகுமார் மீதான குண்டர் சட்டம் ரத்தான நிலைய்ல், 100 கோடி ரூபாய் மோசடி வழக்கில் சிக்கியிருக்கும் பி.டி. அரசகுமாரின் மகள், மகன் வீடுகளிலும் அதிரடி சோதனை இன்று நடக்கிறது. இந்த விவகாரத்தில் மாஜி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழிக்கு சிக்கல் என்றே கருதப்படுகிறது.

தனியார் பள்ளிகளுக்கு அனுமதிகள் பெற்றுத்தருவதாக கூறி, நூறு கோடி ரூபாய் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள பி.டி.அரசகுமாரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம்உத்தரவு.. உத்தரவை ரத்து செய்யக் கோரி, அரசகுமாரின் மனைவி கோகிலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு மீது மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, 2024-25 ஆம் ஆண்டு நடந்ததாகக் கூறப்படும் சம்பவத்துக்கு, 2026 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து, கைது செய்து, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளதாக வாதம். குற்றச்சாட்டுகள் ஜோடிக்கப்பட்டவை எனவும், அரசியல் உள்நோக்கம் கொண்டவை எனவும், குண்டர் சட்டத்தை எதிர்த்த மனு 13 நாட்கள் காலதாமதமாக பரிசீலிக்கப்பட்டதுஎனவும் வாதம் வைத்தார். மனுவைப் பரிசீலிப்பதில் ஏற்பட்ட காலதாமதத்தைச் சுட்டிக்காட்டி நேற்று அரசகுமார் மீதான குண்டர் தடுப்புக் காவல் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகளிடம் அரசு அங்கீகாரம் மற்றும் கட்டட அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் ரூ.100 கோடி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பி.டி. அரசகுமாரின் மகன் மற்றும் மகள் வீடுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

பள்ளிகளைத் தரமுயர்த்துதல், நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருதல், டி.டி.சி.பி கட்டட வரைபட அனுமதி பெற்றுத் தருதல் போன்ற பணிகளை முடித்துத் தருவதாக உறுதியளித்து, பல தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் இருந்து சுமார் ரூ.100 கோடி வரை பணத்தை அரசகுமார் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஜூன் 27-ஆம் தேதி பி.டி. அரசகுமாரைக் கைது செய்தனர். இந்த வழக்கில் இதுவரை 59 பள்ளிகளின் சார்பில் அவருக்கு எதிராகப் புகார்கள் வந்துள்ளன. மோசடியின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, ஜூலை 11-ஆம் தேதி சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ. அமல்ராஜ் உத்தரவின் பேரில் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

எனினும், இதை எதிர்த்து அரசகுமாரின் மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், அவரது வயது (59) மற்றும் உடல்நலப் பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டினார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுவைப் பரிசீலிப்பதில் ஏற்பட்ட காலதாமதத்தைச் சுட்டிக்காட்டி நேற்று அரசகுமார் மீதான குண்டர் தடுப்புக் காவல் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த மோசடி வழக்கில் அரசகுமாருக்கு உடந்தையாக இருந்த நபர்கள் மற்றும் மோசடி செய்யப்பட்ட பணத்தை எங்கு முதலீடு செய்துள்ளார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, சென்னை ஓஎம்ஆர் பகுதியில் உள்ள அரசகுமாரின் மகன் மற்றும் மகளின் வீடுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் தடயங்கள் கைப்பற்றப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. மேலும், தலைமறைவாக உள்ள சில முக்கியக் குற்றவாளிகளைப் பிடிக்க கள்ளக்குறிச்சியில் உள்ள அரசகுமாரின் உறவினர்கள் வீடுகளிலும் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர்.

இந்த ரெய்டு அரசியல் வட்டாரத்திலும் திமுகவிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link