News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், ராஜினாமா செய்த மீதமுள்ள ஐந்து தொகுதிகளுக்கும் உடனடியாக தேர்தல் நடத்தவேண்டும் என்று தவெக அரசு நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் காலியாக உள்ள ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என்ற தேர்தல் ஆணையம் முடிவு எடுத்துள்ளது. இதற்கு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி. மாசிலாமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அடங்கிய அமர்வு முன்பாக, நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது முதல்வர் விஜய் சார்பாக இறுதி வாதங்களைத் தொடக்கி வைத்துப் பேசியனார் மூத்த வழக்கறிஞர் ஜி. மாசிலாமணி.

அப்போது அவர் திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை மற்றும் கரூர் ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதைக் காரணம் காட்டி, அங்கு இடைத்தேர்தல் நடத்தக்கூடாது எனத் திருநெல்வேலியைச் சேர்ந்த கே. வெங்கடாசலபதி என்பவர் பொதுநல மனு  தாக்கல் செய்திருந்தார்.

ஆனால், இந்த வழக்கில் இந்தியத் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில், குறிப்பிட்ட அந்த ஐந்து தொகுதிகளிலும் தேர்தல் தொடர்பான வழக்குகள் முடியும் வரை இடைத்தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிடும் எண்ணம் ஆணையத்திற்கு இல்லை எனத் தெரிவித்தது.

இந்த விவகாரத்தை நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்த வழக்கறிஞர் ஜி. மாசிலாமணி, ஐந்து தொகுதிகளின் இடைத்தேர்தலை நிறுத்தி வைக்கும் இந்த முடிவைச் சுதந்திரமாகத் தேர்தல் ஆணையமே தாமாக முன்வந்து எடுத்ததா அல்லது மனுதாரரின் கோரிக்கையின் அடிப்படையில் எடுத்ததா என்பதைத் தேர்தல் ஆணையம் இதுவரை தெளிவுபடுத்தவில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும், அரசமைப்புச் சட்டத்தின் 226-வது பிரிவின் கீழ் பெறப்பட்ட பொதுநல மனுவை விசாரிக்கும் உயர் நீதிமன்றத்திற்கு மிக விரிவான அதிகாரங்கள் உண்டு என்றும், தேவைப்பட்டால் மனுதாரரை வழக்கில் இருந்து விடுவித்து, நீதிமன்றமே இதனைத் தாமாக முன்வந்து விசாரிக்கும் வழக்காக மாற்றவும் அதிகாரம் உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

அதோடு தொகுதி மக்கள் சட்டமன்றத்தில் தங்களின் பிரதிநிதிகள் இன்றி நீண்ட காலம் இருக்க முடியாது என்ற முதன்மை வாதத்தையும் முதல்வர் தரப்பு முன்வைத்தது. இன்றும் இந்த வழக்கு நடைபெறுகிறது. காலியாக இருக்கும் அனைத்து சட்டமன்றத் தேர்தலிலும் தேர்தல் நடத்தப்பட்டு, பெரும்பான்மை பெற வேண்டும் என்பதே விஜய் விருப்பமாக இருக்கிறதாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link