News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

தாய் மாமன் திட்டத்தைத் தொடங்கிவைக்க வரும் விஜய்க்கு மதுரையே குலுங்கும் அளவுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. தனி விமானத்தில் மதுரைக்கு வந்த விஜய் ரோடு ஷோவாக வந்தார்.

சாலையின் இரண்டு பக்கமும் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று விஜய்க்கு வரவேற்பு கொடுத்தார்கள். அதனால் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த முதல்வர் விஜய்யைப் பார்த்ததும் சாலையில் தொண்டர்கள், பொதுமக்கள் ஆர்ப்பரித்தார்கள்.

வரும் வழியில் மதுரை மீனாட்சி அம்மன் வேடமணிந்த சிறுமியைப் பார்த்ததும் வேனை நிறுத்தி, அந்த குழந்தையைத் தூக்கி கொஞ்சினார் விஜய். அப்போது முதலமைச்சர் விஜய்யிடம் குழந்தை, ‘லவ் யூ விஜய் மாமா’ என்றதும்  உற்சாகத்தில் மக்கள் ஆர்ப்பரித்தனர். விஜய் தூக்கிக் கொஞ்சிய குழந்தை மதியழகு என்று கூறப்படுகிறது.

இதையடுத்து தன்னைப் பார்க்க நின்ற இளம் படையுடன் ஒரு செல்ஃபியும் எடுத்துக்கொண்டார். அதேபோல் காத்திருந்த பத்திரிகையாளர்களுடனும் விஜய் ஒரு செல்பி எடுத்துக்கொண்டார்

விஜய்க்கு கிடைக்கும் வரவேற்பைப் பார்க்கும்போது, இந்த இடைத்தேர்தலிலும் சொல்லி ஜெயிப்பார் என்றே தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link